`எங்கேயும், எப்போதும் சாய்ராம் சொல்வோம்!

`எங்கேயும், எப்போதும் சாய்ராம் சொல்வோம்!

`எங்கேயும், எப்போதும் சாய்ராம் சொல்வோம்!
X

குருவடியின் மூலம் இறைவனின் திருவடியை எளிதில் அடையலாம் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அதன்படி சாயிபாபாவை குருவாக ஏற்று இறைவனின் திருவடியை அடையலாம் என்பது பாபா அருளாசி பெற்றவர்களின் தீவிரமான நம்பிக்கை. ஷீரடி என்னும் சின்னஞ்சிறு ஊரில் வளர்ந்து தம் அற்புதங்களால் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் சாயிபாபா.

அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய அன்பர்களின் வேதனை தீர்க்கவும், துயர் துடைக்கவும் நிகழ்த்திய அதிசயங்கள் பல உண்டு. அதுமட்டுமல்ல தம்முடைய அடியவர்களின் நல்வாழ்வுக்காக அவர் வழங்கிய போதனைகள் பல. அவற்றையே அவரது பக்தர்கள் இப்பவும் தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பாபாவின் அருளையும் சக்தியையும் உணர்ந்தவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஷீரடிக்கு வந்து பாபாவின் அருளை பெற்று செல்கிறார்கள்.

பாபாவின் முக்தி பின்னரும் மசூதியிலேயே இன்றளவும் சூட்சுமமாக அவரின் அருளை உணர்வு பூர்வமாக அனுபவித்து சிலாகித்து சிலிர்த்து கொண்டிருக்கின்றனர்.

குரு பகவானை வணங்க உரிய நாளான வியாழக்கிழமைகளில் சாயிபாபாவை அதனாலேயே வழிபடுகின்றனர். அவரின் அருளுரைகள் பல. அதில் நான் உன் வீட்டில் உன்னுடனே தான் இருக்கிறேன். ஆனால் என்னை இன்னும் நீ உணர்ந்துகொள்ளவில்லை. உன் கவலைகளையெல்லாம் என் தோளில் சுமக்கவும் உன் சிரமங்களை போக்கவும் தான் உனக்கு அருகிலேயே இருக்கிறேன்.

உனக்கு பிடித்தமான நெருக்கமான உருவங்களாக நானே காட்சி தருவது நானே!’’ என்கிறார் சாயிபாபா.அவரை வழிபட வியாழக்கிழமை உகந்தது என்றாலும் எங்கேயும், எப்போதும் அவரை மனதில் தியானித்து சாயிராம் என்று உள்ளுக்குள் உச்சரித்தபடி பாபாவை வேண்டிக் கொள்ள பக்தர்களின் துயரங்களை தீர்க்க ஓடோடி வருவார். நீங்கள் இருக்கும் இடத்திற்கே உங்களை தேடி வந்து கண்ணீரைத் துடைத்து காத்தருள்வார்.

சாயிபாபாவின் திருவடியை சரணடைவோம். அவரின் அருளைப் பெறுவோம். ஓம் ஸ்ரீசாய்ராம்!

Next Story
Share it