Logo

தொழுநோய் குணமாகியது

ஷீரடியில் ஆமன்பாய் என்றொரு பெண்மணி வசித்து வந்தார். அவருக்கு கனாடே என்றொரு மகன். பாவம் ,அவனுக்கு இளம் பிராயத்திலேயே தொழுநோய் தொற்றிக் கொண்டது. அவளது தகுதிக்கு ஏற்றவாறு என்னென்னவோ மருத்துவம் பார்த்தும், குணமாகவில்லை.
 | 

தொழுநோய் குணமாகியது

ஷீரடியில் ஆமன்பாய் என்றொரு பெண்மணி வசித்து வந்தார். அவருக்கு கனாடே என்றொரு மகன். பாவம் ,அவனுக்கு இளம் பிராயத்திலேயே தொழுநோய் தொற்றிக் கொண்டது. அவளது தகுதிக்கு ஏற்றவாறு என்னென்னவோ மருத்துவம் பார்த்தும், குணமாகவில்லை. “தன் மகன் ஆயுள் முழுவதும் தொழுநோயுடனேயே கழிக்க வேண்டியது தான்" என்று வருத்தப்பட்டாள். 

சாய்பாபா ஷீரடிக்கு வந்திருந்த புதிது. நிறைய பேர் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்த போதிலும், சிலர் சாய்பாபாவை மகான் என்றே நம்பினர். அந்தச் சிலரில் ஆமன்பாயும் ஒருவர். சாய்பாபாவின் மீதும், அவரது அருளாற்றலின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவள்.  தன் மகனின் தொழுநோயைக் குணப்படுத்தும் சக்தி சாய்பாபாவிற்கு மட்டுமே இருப்பதாக அவள் நம்பினாள். சாய்பாபாவிடம் அந்த நம்பிக்கை யை வெளியிட்டாள் சாய்பாபாவும் அதற்குச் சம்மதித்தார்.

"நல்ல பாம்பின் விஷம் வேண்டும்.  அதனைக் கொண்டு நான் ஒரு மருந்து தயாரித்துத் தருவேன். அதனைப் பருகினால் கனாடேயின் தொழு நோய் முழுமையாக நீங்கிவிடும் . ஆனால், அந்த நல்ல பாம்பை கனாடேதான் பிடித்துக் கொண்டு வரவேண்டும்"  என்றார் சாய்பாபா. இது ஆமன் பாய்க்கு சற்று அதிர்ச்சியைத் தந்தாலும், மகனின் நோய் குணமாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அவரின் மகனுக்கோ இதில் அத்தனை சம்மதம் இல்லை. அதிலும் நல்ல பாம்பை அவனே தேடிப் போய்ப் பிடித்து வரவேண்டும் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  

அதற்குப் பயம் தான் காரணம். இதனைப் புரிந்து கொண்ட சாய்பாபா, “பாம்பைப் பிடிக்கப் பயம் வேண்டாம். காரணம் தொழுநோயாளிகளை நல்ல பாம்பு கடிக்காது. மேலும், அவர்களைக் கண்டு விலகியே நிற்கும்." என்று அவனது அச்சத்தை விலக்க முயன்றார் அத்துடன் , ஊரை அடுத்துள்ள காட்டில் தேடினால் நல்ல பாம்பு கிடைக்கும் " என்று வழியும் சொல்லித் தந்தார் சாய்பாபா. வேறு வழியின்றி அந்தக் காட்டிற்குள் சென்று பாம்பைத் தேடினான் கனாடே. நல்ல பாம்பு ஒன்றும் அவன் விழியில் தென்பட்டது .  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதனருகே சென்று கையால் பிடித்தான் .என்ன ஒரு விந்தை !

சாய்பாபா சொன்ன மாதிரி அந்த பாம்பு அவனைக் கடிக்கவில்லை. மாறாக , அவனிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தது.  ஆனாலும், தனது பிடியை இறுக்கியவனாய், அப்படியே சாய்பாபாவிடம் வந்தான். சாய்பாபா வும் அந்த பாம்பின் விஷத்தை வெளியே எடுத்தார். பின்னர், அதிலிருந்து ஏதோ பக்குவம் செய்து மருந்து தயாரித்தார்.  அதனைக் கனாடேக்குக் கொடுத்து பருகச் சொன்னார். அவனும் அந்த மருந்தை உண்டான். அப்புறம் சில தினங்களில், குணமே ஆகாது என்று அடித்துச் சொன்ன அனைவருமே ஆச்சரியத்தில் வாய் பிளக்கிற விதமாக, அவனது தொழுநோய் மறைந்து , நல்ல குணம் கிடைத்தது. இந்தச் சேதி அந்த ஊர் முழுக்க வேகமாகப் பரவியது. சாய்பாபாவின் மகாசக்தி அனைவருக்கும் புரியத் தொடங்கியது.
                         ஓம்  ஸ்ரீசாய்ராம்!!!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP