Logo

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது கோயில் நிர்வாகம். அதன் படி, இனி கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பெண் பக்தர்கள் லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், துப்பட்டா அணியாமல் சுடிதார் அணிந்து வருவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஆண்கள் டி-ஷர்ட் போன்ற
 | 

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது கோயில் நிர்வாகம். அதன் படி, இனி கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பெண் பக்தர்கள் லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், துப்பட்டா அணியாமல் சுடிதார் அணிந்து வருவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஆண்கள் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து கோயிலுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை!!

ஆலயங்களுக்கு பக்தர்கள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வருவது குறித்து குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு நீதிஅன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் அணிந்து ஆலயங்களுக்குள் செல்லலாம் என்று உத்தரவிட்டு இருந்தனர். 

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை!!

இந்நிலையில், திடீரென சென்னையில் மயிலாப்பூரில் உள்ள புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் லெக்கின்ஸ், டி.சர்ட் அணியக் கூடாது என்றும் வேட்டி, சேலை மற்றும் நாகரிகமான உடைகளை அணிந்து தான் ஆலயத்திற்குள் வரவேண்டும் என்று கோவில் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை!!

இன்று பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால், அதிகாலையில் இருந்தே கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். ஆடைகள் கட்டுப்பாடு குறித்த இந்த திடீர் அறிவிப்புகள் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும், இன்னும் ஒரு சில தினங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP