உழைப்பு ஒருபோதும் வீண் ஆகாது

சீரடியில் வாழ்ந்த சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணமாயி. ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டிற்கு அருகில் சாய்பாபா வந்தார். சாய்பாபா மனதுள் என்ன வைத்திருந்தாரோ என்று தெரியவில்லை. உடனே, சாய்பாபா ஓர் ஏணி ஒன்று கொண்டு வா!" என்று சொன்னார். அங்கிருந்த ஒருவர் உடனே

உழைப்பு ஒருபோதும் வீண் ஆகாது
X

சீரடியில் வாழ்ந்த சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணமாயி. ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டிற்கு அருகில் சாய்பாபா வந்தார். சாய்பாபா மனதுள் என்ன வைத்திருந்தாரோ என்று தெரியவில்லை. உடனே, சாய்பாபா ஓர் ஏணி ஒன்று கொண்டு வா!" என்று சொன்னார். அங்கிருந்த ஒருவர் உடனே சென்று ஓர் ஏணியைக் கொண்டுவந்து அங்கு வைத்தனர். சாய்பாபா அந்த ஏணியை வீட்டின்மீது சுவரில் சாய்த்து தாமே கூரையின் மீது ஏறினார். அவர் மனதில் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பது எவருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் ஏணியானது வாமன் கோந்தக்கருடைய வீட்டின்மேல் சாய்த்துப்படிஇருந்தது. சாய்பாபா கிடுகிடுவென்று ஏணியில் ஏறிக் கூரையை அடைந்தார்.

உழைப்பு ஒருபோதும் வீண் ஆகாது

மலேரியா காய்ச்சல் ராதா கிருஷ்ணமாயி நடுங்கிக் கொண்டிருந்தனர். அதை ஓட்டி விரட்டுதற் பொருட்டு அவர் மேலே ஏறியிருக்கலாம் என்று பக்தர்கள் நினைத்தனர். கீழே இறங்கினவுடனே ஏணியைக் கொண்டு வந்தவர்களுக்கு சாய்பாபா இரண்டு ரூபாய் கொடுத்தார். சிலர் தைரியத்துடன் சாய்பாபாவை ஏன் அவர் இவ்வளவு அதிகம் கொடுத்தார் என்று கேட்டனர்.அதற்கு அவர் ஒருவரும் மற்றவர்களின் உழைப்பை வெறுமையாகக் கொள்ளக்கூடாது என்று கூறினார். உழைப்பவனுக்கு,அவனுக்கு உரியவைகள் ஒழுங்காகவும் தாரளமாகவும் கொடுக்கப்பட்ட வேண்டும். சாய்பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றபட்டால்,அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும் திருப்திகரமாகவும் அளிக்கப்பட்டால் தொழிலாளர்களும் இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள் என்றார் சாய்பாபா.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it