குங்கிலியக் கலய நாயனார்-63 நாயன்மார்கள்
சோழ நாட்டில் உள்ள திருத்தலம் திருக்கடவூர். மார்க்கண்டேயனை காப்பாற்ற எம்பெருமான் காலனை காலால் எட்டி உதைத்த புனிதத்திருத்தலம் இது. இவ்வூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் கலயனார். நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கிய இவருக்கு சிவபெருமானின் மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் சிறுவயது முதலே நிறைந்திருந்தது.
கடவூர் தலத்தின் மூலவரான அமிர்தகடேஸ்வரர் பாலகனான மார்க்கண்டேயரைக் காப்பாற்றியதால் இப்பெருமானிடம் மேலும் அன்பு கொண்டார் கலயனார். இவர் இத்திருக்கோயிலுக்கு குங்கிலியத் தூபம் இடும் பணியை மகிழ்வுடனும் பக்தியுடனும் செய்து மகிழ்ந்தார்.அதனால் இவர் குங்கி லியக் கலயனார் என்ற பெயரோடு அழைக்கப்பட்டார். மணம் கமிழ குங்கிலியத்தை இறைவனுக்கு அளித்து பெருமகிழ்ச்சி அடைந்த இவரை சோதிக்க எண்ணினார் எம்பெருமான்.
குங்கிலிய கலியனார் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. அதனாலென்ன என்று வீட்டில் இருக்கும் கால்நடைகளை விற்றார். நிலங்களை விற் றார். இறைவனின் திருவிளையாடலாயிற்றே அதனால் வறுமை சற்றும் குறையாமல் கோரத்தாண்டவமாடியது. வாழ்க்கையில் வசதிகளைக் குறைத்து கொண்ட கலியனார் இறைவனுக்கு தொண்டு செய்வதை மட்டும் விடவேயில்லை.
அடுத்த வேளை குழந்தைகள் பசியாற வேண்டுமே துடித்த கலியனாரின் மனைவி செய்வதறியாது அழுதாள். துடித்தாள். பிறகு குழந்தைகளின் பசியை போக்க திருமாங்கல்யத்தைக் கழற்றி கணவரி டம் தந்து இதை கொடுத்து நெல்மணிகளை வாங்கி வாருங்கள். குழந்தைகள் பசியாற செய் யலாம் என்றாள்.மனம் வருந்தியபடி அதை வாங்கிச் சென்றார் கலயனார்.
அச்சமயம் வீதி வழியே வணிகன் ஒருவன் குங்கிலிய பொதியைச் சுமந்து வந்தான். அதைக் கண்ட கலயனாருக்கு வீடு, குழந்தைகளின் பசி அனைத்தும் மறந்தது. நாளை இறைவனுக்கு குங்கிலியம் வாங்க குறையில்லை என்று கையிலிருந்த திருமாங்கல்யத்தை வணிகனிடம் கொடுத்து குங்கிலிய பொதியை வாங்கி அமிர்தகடேஸ்வரரைப் பார்க்க சென்றார்.
வீட்டில் குழந்தைகள் தந்தை வருவார்.அமுது உண்ணலாம் என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்கள்.நேரம் கழிந்தது. பசி மிகுதியால் அழுது அரற்றவும் வழியின்றி மயங்கிய நிலையில் குழந்தைகளும்,அவர் மனைவியும் கண் அயர்ந்தார்கள். இனியும் பொறுக்கலாமோ என்று நினைத்த இறைவனின் தாயுள்ளம் கலயனார் வீட்டில் நெற்குவியலையும், ஆடை ஆபரணங்களையும்,பொன் மழையையும் உண்டாக்கினார்.
கலயனார் அவரது மனைவி இருவரது கனவிலும் வந்து இச்செய்தியைக் கூறி மறைந்தார்.
கலயனாரின் மனைவி எழுந்து பார்த்தாள்.வீடு முழுக்க நிரம்பியிருந்த பொன், பொருளைக் கண்டு ஆனந்தக் கண்ணீரில் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி அக்கணமே குழந்தைகளுக்கு சமைக்க தொடங்கினாள்.ஆலயத்தில் இருந்த கலயனார் மனமுருக இறைவனை வணங்கும் போது வீட்டுக்கு போய் பாலுடன் தேன் கலந்த உணவை உண்டு மகிழ்ந்திரு என்னும் அசரீரி ஒலித்தது.
கலயனார் வீட்டுக்கு வந்தார். குழந்தைகளை அணைத்து மகிழ்ந்தார். வீட்டின் மகிழ்ச்சியை கண்டு என்னை போன்ற சிறுபக்தனுக்கும் இறைவன் அருள் புரிந்திருக்கிறாரே என்று எம்பெருமானிடம் உருகினார்.
இறைவன் உலகுக்கு கலயனாரின் அன்பை உணர்த்த எண்ணினார். திருப்பனந்தாளில் வசித்த சைவ பெண்ணான தாடகை திருப்பனந்தாள் இறை வனை வழிபட்டு மாலை சாற்ற முனைந்தாள். அச்சமயம் அவளது ஆடை சற்று நெகிழ தொடங்கியது. ஆடையை அவள் இரு கைகளால் இறுக பற்றி மாலை போட முடியவில்லையே என்று வருந்தினாள். அச்சமயம் இறைவன் அப்பெண்ணுக்காக இரங்கி கழுத்தை நீட்டினார். அதனால் திருப்பனந்தாள் சிவலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது.
ஆலய திருப்பணியின் போது சோழ மன்னன் யானையைக் கொண்டு சிவலிங்கத்தை நிமிர்த்த முயற்சி செய்தான். ஆனால் என்ன செய்தும் சிவலிங்கத்தை நிமிர்த்த இயலவில்லை. மன்னன் வருந்தினான். இவ்விஷயம் கலயனாரின் காதுகளை எட்டியது. திருப்பனந்தாள் வந்த கலயனார் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
பிறகு பலமான கயிற்றின் ஒரு முனையை தன்னுடைய கழுத்தில் கட்டி மற்றொரு முடிச்சை லிங்கத்தின் மீது கட்டி பலம் கொண்ட மட்டும் இழுத் தார்.போகும் உயிர் இந்தப் பணியில் போகட்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் எம்பெருமான் அவரது பக்திக்கு கட்டுப்பட்டு நிமிர்ந்தார். சோழமன்னன் திருமாலும் காணமுடியாத அடிமுடியை சிவனடியார்களான தங்களால் காணமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.உங்களால் தான் நாங்கள் உயர்ந்து நிற்கிறோம் என்று பொன்னும் பொருளும் கொடுத்து மகிழ்ந்தார்.
சில காலம் திருப்பனந்தாளில் தங்கியிருந்து சிவத் தொண்டு புரிந்த குங்கிலியக் கலியனார் மீண்டும் திருக்கடவூரை அடைந்தார். சிவத்தொண்டில் புகழ்பட வாழ்ந்த குங்கிலியக் கலியனார் இறுதியில் இறைவனின் திருவடியை அடைந்தார்.சிவாலயங்களில் ஆவணி மாதம் மூல நட்சத்திரத் தன்று இவருக்கு குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
newstm.in
newstm.in