கிருஷ்ணனும் ராதையும் நேரிடையாக படையலை உண்ணும் அதிசய தலம்...

தன் குறும்புத்தனத்தால் எல்லோரையும் கட்டிப்போட்ட மாயக்கண்ணன் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டவனும் கூட. வெண்ணெய் திருடியவன் வெறும் வாயில் உலகையே சுருட்டி வைத்திருந்தவன் ஆயிற்றே.

கிருஷ்ணனும் ராதையும் நேரிடையாக படையலை உண்ணும் அதிசய தலம்...
X

கிருஷ்ணனைப் பிடிக்குமா? என்று கேட்டால் இல்லையென்று யாராவது சொல்வார்களா? தன் குறும்புத்தனத்தால் எல்லோரையும் கட்டிப்போட்ட மாயக்கண்ணன் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டவனும் கூட. வெண்ணெய் திருடியவன் வெறும் வாயில் உலகையே சுருட்டி வைத்திருந்தவன் ஆயிற்றே.

கிருஷ்ணனின் குறும்புகள் கேட்க கேட்க அவன் மீது இனம்புரியாத காதலையும், பக்தியையும், பரவசத்தையும் உண்டாக்கும். கிருஷ்ணன் மதுரா வில் பிறந்தவன். இன்றும் அவன் வாழ்ந்ததற்கான அடையாளங்களைப் பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வைத்திருக்கிறது மதுரா. ஆனால் ஆன்மிக அதிசயத்தோடு அமானுஷ்ய நம்பிக்கைகளும் இங்கிருக்கும் மக்களிடம் காணப்படுகின்றன.

மதுரா மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் விருந்தாவன் கிருஷ்ணனின் காலத்தில் கிருஷ்ணனின் புல்லாங்குழலுக்கு விருந்தாவனே அதிர்ந்து ஆர வாரமாய் உற்சாகமாய் இருந்திருக்கிறது. ஒரு புறம் ஆரவாரமும் மறுபுறம் அமைதியும் அங்கிருந்த மக்களை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் இன்றும் அந்தி சாய்ந்த பிறகு கேட்கும் அந்த புல்லாங்குழல் ஓசை கிருஷ்ணனுடையதே என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

தினமும் இரவு நேரங்களில் கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசை மக்களுக்கு நாதமாய் கேட்டு மெய் மறக்க வைப்பதாக அங்கிருக்கும் மக்கள் பக்தி யோடு கூறுகிறார்கள்.இந்த ஓசையைப் பதிவு செய்ய முடியாது என்றாலும் நீங்களும் இங்கு வந்து தங்கி புல்லாங்குழல் ஓசையை கேட்டு ரசிக்க லாம் என்கிறார்கள் விருந்தாவனவாசிகள்.

இங்கிருக்கும் கோயிலில் மாலை 5 மணிக்கெல்லாம் வழிபாடு முடிந்து நடை சாத்தப்படுகிறது. இந்தக் கோயிலிலிருந்து தான் கிருஷ்ணரும், ராதா வும் காட்டுக்குள் ராசலீலாவுக்கு செல்கிறார்கள் என்கிறார்கள் இங்கிருக்கும் ஆன்மிகவாதிகள். நிதிவனம் என்னும் நீரில்லா காட்டில் இருக்கும் மரங்கள் பச்சை பசேலென இருப்பது அதிசயமாக இருக்கிறது, மரங்கள் கிருஷ்ணனை வரவேற்கும் விதமாக நிமிர்ந்து நிற்காமல் வளைந்தே காணப்படுகிறது காட்டுப்பகுதியிலும் அமானுஷ்யங்களும் ஆச்சரியங்களும் அனுதினமும் நடந்து கொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணனும் ராதையும் நேரிடையாக படையலை உண்ணும் அதிசய தலம்...

இந்த காட்டுப்பகுதியில் இருக்கும் கோயிலிலும் தினமும் மாலை நேர வழிபாடு முடிந்த பிறகு புடவை, நைவேத்யம் வைக்கப்பட்டு அதன் பிறகே சாத்தப்படுகிறது. மறுநாள் காலை கோயிலை திறக்கும் போது புடவை கலைந்திருப்பதாகவும் நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதம் சாப்பிட்டதற் கான அறிகுறி இருப்பதாகவும் பூசாரிகள் தெரிவிக்கிறார்கள். கிருஷ்ணரும் ராதையும் இரவு நேரங்களில் இங்கு உலா வருவதாகவும் அவர்களே இந்த உடைகளை அணிந்து பிரசாதம் உண்டு மகிழ்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

சூரியனின் மறைவுக்கு பிறகு இந்தக்கோயிலின் உள்ளே நுழைவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அப்படி மீறி சென்றால் பக்தர்கள் பார்க்கும் திறனையோ அல்லது கேட்கும் திறனையோ இழந்துவிடுவார்கள். அல்லது மூளை கலங்கி சித்த நிலையையும் அடைவார்கள் என்று அச்சத்தோடு கூறுகிறார்கள். பக்தர் ஒருவர் அப்படி இங்கு இருந்து பார்வை இழந்ததாகவும் இங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்று வரை மர்மங்கள் நிறைந்த கோவிலாக இந்த இடம் சொல்லப்பட்டாலும் அந்த மர்மத்தை நிகழ்த்துவது குறும்புக்கார கண்ணனே என்று உறுதியாக சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள். மதுராவுக்கு சென்றால் கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையைக் கேட்க விருந்தாவனுக்கும் சென்று வாருங்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையால் கிருஷ்ணனையே நேரில் தரிசித்த பேறு கிடைக்குமல்லவா...

newstm.in


newstm.in

Next Story
Share it