Logo

கோட்புலி நாயனார்-63 நாயன்மார்கள்

கோட்புலியாரின் வீட்டிலும் பஞ்சம் தாண்டவ மாடியது. செய்வதறியாமல் திகைத்தவர்கள் வீட்டில் இருந்த நெல்மணியை உபயோகப்படுத்திக்கொண்டார்கள்.
 | 

கோட்புலி நாயனார்-63 நாயன்மார்கள்

சோழநாட்டில் நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் வீரவேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலியார். இவர் சோழருடைய படைத் தலைவராக விளங்கினார்.போர்க்களத்தில் அஞ்சாத வீரரான இவர் எதிரிகளைக் கொன்று குவிப்பதில் வல்லபுலியாக இருந்தார். அதனாலேயே இவர் கோட்புலி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். 

அரசர்களின் வெற்றிக்கு இவரது போர்த்திறமையும் ஒரு முக்கிய காரணம் என்பதாலேயே இச்சிறப்பு பெயர் நிரந்தரமாயிற்று. புலியென இருக்கும் இவர் சிவபெரிமானின் மீது வைத்திருந்த அன்பு அளப்பறியாதது. தமக்கு கிடைக்கும் அளவற்றை நிதி முழுவதையும் சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்து மகிழ்ந்தார். கிடைக்கும் நிதி முழுவதும் நெல் குவியலாக வாங்கி வீட்டுக்குள் அடுக்கினார்.குவியல் குவியலாக இருந்த நெல் மணியை கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தினார்.

ஒருமுறை கோட்புலியார் எதிரிநாட்டுக்குச் சென்று போர் புரிய வேண்டிய நிர்பந்தம் வந்தது. தொலைதூரம் என்பதால் வீட்டில் இருப்பவர்களி டம் விடைபெற்று சென்றார். அச்சமயம் வீட்டில் கோயில் திருப்பணிக்காக ஒதுக்கியிருக்கும் நெற் குவியலை எக்காரணம் கொண்டும் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாக கூறி சென்றார்.

நாள்கள் கடந்தன. அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். கோட்புலியாரின் வீட்டிலும் பஞ்சம் தாண்டவ மாடியது. செய்வதறியாமல் திகைத்தவர்கள் வீட்டில் இருந்த நெல்மணியை உபயோகப்படுத்திக்கொண்டார்கள். ஒரு வழியாய் பகைவர்களைக் கொன்று குவித்து வெற்றி பெற்று திரும்பிய கோட்புலியார், கோயில் திருப்பணி செய்ய வேண்டும் என்று மகிழ்ந்தபடி வீட்டுக்குள் வந்தார்.

கோட்புலியாரின் கண்களில் முதலில் மலை போல் இருந்த நெற்குவியல் மடு போல் குறைந்திருப்பது கண்ணில் பட்டது. ஆவேசம் கொண்டவராய் வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அழைத்தார். அவரது கோபத்தைக் கண்டு அஞ்சியவர்கள் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியதையும், அத னால் உறவினர்கள், சுற்றம் சூழ நெல்மணிகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்கள். அவர் எதுவும் பேசாமால் அனைவரையும் வரவ ழைத்தார். அவர்களை நிற்கவைத்து தப்பி ஓட முடியாதவாறு செய்து அனைவரையும் வெட்டி சாய்த்தார்.

தாய், தந்தை, மனைவி,மக்கள், உடன்பிறந்தார், உறவினர் என்று  ஓர் ஆண்குழந்தை தவிர ஒருவரும் தப்பவில்லை. அப்போது அவர் குடியில் சேர்ந்தவர் ஒருவர் இந்தப் பிள்ளை நெல்மணிகளை உண்ணவில்லை. அதனால் இக்குழந்தையை விட்டுவிடும் என்றார். ஆனால் கோட்புலியார் இந்தக் குழந்தை உண்ணவில்லை. ஆனால் நெல்மணியை உண்ட அன்னையின் முலைப்பாலை குடித்தவனாயிற்றே என்று குழந்தையையும்   இரண்டு துண்டுகளாக வெட்டினார்.

சிவபெருமான் எழுந்தருளி உன் உடைவாளால் உயிர் நீத்த அனைவரும் பிறவிபாவத்தை விட்டு அகன்றவர்கள். அவர்கள் எம்மிடத்தில் இன்ப மாக வாழ்வார்கள். நீயும் எம்முடன் இணைவாய் என்று கருணை செய்தார். சிவத்தொண்டு புரிந்து இறுதியில் சிவபாதம் அடைந்தார் கோட்புலி நாயனார். சிவாலயங்களில் ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP