Logo

குரு பார்க்க கோடி நன்மையா?

உடல் உபாதைகளால் அவ்வப்போது பாதிப்படைபவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை இயலாத முதியோருக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் குணம டையலாம். குருபகவானின் பார்வை உங்கள் மீது உக்கிரமாக இருந்தால் வியாழக்கிழமை விரதமிருக்கும் தினங்களில் அன்னதானம் செய்து
 | 

குரு பார்க்க கோடி நன்மையா?

அதிர்ஷ்டம் இருந்தால் எல்லாம் தேடிவரும் என்பார்கள். அந்த அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய நீதிமான் யார் தெரியுமா குருபகவான் தான். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். ஒருவனை நல்வழிக்கு கொண்டு வரும் பெரும் பணியை குருபகவான் நினைத்தால் செவ்வனே செய்ய முடியும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் நடைபெறும் நாள் குருபகவான் மகம் நட்சத்திரத்தில் சந்திக்கும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவர்களின் குருவாக இருக்கும் குருபகவான் அறிவிலும் சிறந்துவிளங்குபவர். ஞானமுள்ளவர் என்பதால் இவர் பிரகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் குருபகவானே சுபக்கிரகம் என்றழைக்கப்படுகிறார். சாத்விகமான குணத்தைக் கொண்ட குருபகவானை ஆசான், குரு, வியாழன், பொன்னன், தனகாரகன், சந்தான காரகன், சுபகாரகன் என்றும் அழைக்கிறோம். 

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவனுடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் அவர் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் வெற்றி முத்திரை பதிப்பார் என்று கூறுகிறது.அதனால் தான் தொழில் செய்யும் போதும், காரிய தடைகள் தொடர்ந்து ஏற்பட்டாலும், வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தாலும் சம்பந்தப்பட்டவரின்  ஜாதகத்தில் குருபலன் எப்படியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கிறோம்.

குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று இவரை வழிபட்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்வார். தம்மை நினைத்து வழிபடும் பக் தர்களுக்கு வேண்டிய மன மகிழ்ச்சி, உயர்ந்த பதவி, திருமணப்பேறு, குழந்தை வரம், செல்வம், நிம்மதி என்று அனைத்தையும் நிறைவாக தந்து மகிழ்ச்சி காண்பவர் குருபகவான். 

ஒருவரது ஜாதகத்தில் குரு கெட்டிருந்தால்,  தீமை தரக்கூடிய இடத்தில் இருந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவானை வழி பட்டு வந்தால் தடைகளும் சஞ்சலங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். வியாழக்கிழமை விரதமிருக்க நினைப்பவர்கள் வளர்பிறை வியாழக் கிழமை அன்று விரதத்தை தொடங்குவது உடனடி பலனை தரும். குறிப்பாக குருவின் பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்குரிய சாந்தியும்  பூஜையும் செய்வது நல்லது. குருபூஜை செய்ய விரும்புபவர்கள் பூஜையின் போது தட்சிணாமூர்த்தியின் திருவுருவப்படத்தை வைத்து பூஜிக்க லாம்

வாழ்வில் எல்லா வளமும் பெற்றிருந்தாலும் வியாழன் தோறும் குருபகவானை வணங்கி வந்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.அன்று  குருவுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்கள் அல்லது முல்லை மலர்களால் அலங்கரித்து,108 எண்ணிக்கையில்  கொண்டைக் கடலை மாலையைக் கோர்த்து அணிவிக்கலாம். யானையை வாகனமாக கொண்ட குருவுக்கு கொண்டைக்கடலை விருப்பமான பிரசாதமும் கூட. இனிப்பு சுவை பிடிக்கும் என்பதால் அவைகூட நைவேத்யத்துக்குப் பயன்படுத்தலாம். குருபகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி விரதம் இருப்பதோடு மெளன விரதமும் மேற்கொள்ளலாம்.

உடல் உபாதைகளால் அவ்வப்போது பாதிப்படைபவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை இயலாத முதியோருக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் குணம டையலாம். குருபகவானின் பார்வை உங்கள் மீது உக்கிரமாக இருந்தால் வியாழக்கிழமை விரதமிருக்கும் தினங்களில் அன்னதானம் செய்து அவர் அருளை பெற முயற்சிக்கலாம்.குரு பார்க்க கோடி நன்மை உண்டாகுமே...


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP