Logo

மனிதனாக பிறந்தது என் தவறா?

மனிதன் என்பவன் எப்படியிருக்க வேண்டும். கோவத்திலும், மகிழ்ச்சியிலும், நிதானத்திலும், துன்பத்திலும் ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை இலகுவாக இருப்பதில்லை. எல்லோருமே ஏதோ ஒரு வகை யில் பிறரால் அவமானப்படுத்தப்பட்டோ, ஏமாற்றப்படுத்தப்பட்டோ...
 | 

மனிதனாக பிறந்தது என் தவறா?

மனிதன் என்பவன் எப்படியிருக்க வேண்டும். கோவத்திலும், மகிழ்ச்சியிலும், நிதானத்திலும், துன்பத்திலும்  ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.  எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை இலகுவாக இருப்பதில்லை. எல்லோருமே ஏதோ ஒருவகையில் பிறரால் அவமா னப்படுத்தப்பட்டோ, ஏமாற்றப்படுத்தப்பட்டோ இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் மன உறுதியை இழக்காமல் இருப்பது முக்கியம். அந்த நேரத்தில் எப்படி  நம் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் முக்கியம். இதற்கு கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

மகாபாரதத்தில் கர்ணன் கிருஷ்ணனிடம் தன் வாழ்க்கையில் நடந்த குறைகளைக் குறித்து காரணத்தைக் கேட்டான். நான் பிறந்ததும் என் தாய் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிய குழந்தை என்று காரணத்தையும் சொன்னார்கள். ஆனால் இதில் என் மீது தவறு எங்கே இருந் தது என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை.

அதன்பிறகு எனக்கு கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசை தோன்றியது. துரோணாச்சாரியார் நான் சத்ரியன் அல்ல என்று எனக்கு கல்வி கற்றுத் தரவில்லை. பரசுராமர் நான் சத்ரியன் என்று கூறி படித்த எல்லாவற்றையும் மறக்க செய்தார். இதிலும் என் தவறு என்று எதுவுமே இல்லை. திரெளபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள  சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை தேரோட்டியின் மகன் என்று அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

குந்திதேவியாரே தனது மகன்களைக் காப்பாற்றவேண்டும் என்று என்னை தேடி வந்தார். ஒருவருமே என்னை ஏற்றுக்கொள்ளாமல் எனக்கு துன் பத்தை மட்டுமே அளித்த போது  துரியோதனன் மட்டுமே என்னை அரவணைத்தான். அப்படியிருக்கும் போது நான் அவன் புறம் நிற்பதுதான் சரி யாக இருக்கும் என்று கேட்டான்.

கிருஷ்ணன் கூறினார். உனக்காவது பரவாயில்லை. நான் பிறந்ததே சிறைச்சாலை. பிறப்பதற்கு முன்பே மரணிக்க காத்திருந்தேன். பெற்றோர்க ளைப் பிரிந்தேன். மாட்டு தொழுவத்திலும் சாண வாசனையிலும் வளர்ந்தேன். 16 வயதுவரை கல்வி கற்க செல்லவில்லை. என் மக்களை ஜராசந் திடமிருந்து காப்பாற்ற யமுனை நதிக்கரையிலிருந்து என்னுடைய சமூகத்தையே நகர்த்திக்கொண்டுவந்தேன்.இதையெல்லாம் விடு. 

துரியோதனன் வெற்றிபெற்றால் உனக்கு நாடு, படைசேனை எல்லாம் கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும். கண்ணன் தான் இந்தப் போருக்கு காரணம் என்ற பெயரைத் தவிர என்றார் கிருஷ்ணர். நம் வாழ்க்கையில் தவறுகள் நடக்கும் போதெல்லாம் நாமும் தவறான பாதையை நோக்கி செல்ல வேண்டுமென்பதில்லை. எதிரிகளால் வீழ்த்தப்பட்ட நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே என்று அறிவுரை கூறினார். 

நான் மனிதனாக பிறந்தது என்னுடைய தவறா என்ற கேள்விகளை விடுத்து  வாழ்க்கையில் நடக்கும் அதர்மத்தை மீறிய தவறுகளிலிருந்து தர் மம் காக்காமல்  மீண்டுவருவதே சிறந்தது. அதையும் தாண்டி அதற்கு இறைவனின் துணையும் அவசியமே....

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP