Logo

இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா? அறிவியலா?

பேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா? அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா? அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா? அறிவியல் என்பதா?
 | 

இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா? அறிவியலா?

பேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா? அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா? அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா? அறிவியல் என்பதா?  எப்படியாக இருந்தால் என்ன நடப்பவை நன்மையாக இருக்கும் பட்சத்தில் அவை ஆன்மிகமாகவும் இருக்கலாம். அறிவியலாகவும் இருக்கலாம். 

கிராமங்களில் இடி இடித்தால் போதும் ஊரில் இருக்கும் நண்டுகள், பொடிசுகளி டம் அர்ஜூனா என்று சொல் என்பார்கள். அப்படிச் சொன்னால் இடி மேலே விழாது என்பது பலரது எண்ணம். ஆனால் காலப்போக்கில் இப்போதுதான் இடி தாங்கியை கட்டடங்களின் கூரைகள் மேல் பொருத்தி விடுகிறோமே என்று கேட்கலாம்.

ஆனால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்றால் உண்மையில் அதற்கு சக்தி உண்டு.  அந்த சக்தி உங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் வகையில் எவ்வித குறை பாட்டையும் கொண்டு வராது. ஆன்மிக ரீதியாக அர்ஜூனன் என்பவனை வழிபட்டாலும் ஆழ்ந்து நோக்கினால் அதிலிருக்கும் அறிவியல் புரியும். 

மழைக்காலங்களில் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்று சொன் னால் இடி தாக்காது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் பொதுவாக இடி என்பது மின்னலின் வெப்பத்தின் காரணமாக விரிவடையும் காற்று அளவுக்கு அதிகமாக விரிவடையும் போது பெரும் சத்தத்துடன் வெடிக்கிறது. இதுதான் இடி என்று அழைக்கிறோம்.

மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் தான் நிகழ்கின்றது. மின்னல் அதிவேகத் தில் செல்வதால் பார்க்க முடிகிறது. இந்த மின்னல்தான் பூமியைத் தாக்குகி றது. மின்னலில் இருக்கும் வெப்பமே பூமியில் உள்ள பொருளின் மீது பட்ட தும் தீ பிடித்து எரிய காரணமாக இருக்கிறது. அதனால் தான் பச்சைமரமாக  இருந்தாலும் அது மின்னலின் வெப்பம் பட்டதும் தீப்பிடித்து எரிந்துவிடுகிறது.

நன்றாக கவனித்துப் பார்த்தால் இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும். இந்த காதுகளை அடைப்பில் இருந்து விடுவிக்கும் மந்திரம் தான் அர்ஜூனா அர்ஜூனா என்று வாய்விட்டு அழைப்பது. எப்படி என்கிறீர்களா? இதற்கும் விளக்கம் உண்டு.

அர் என்று சொல்லும் போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜூ என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. னா  என்னும் போது வாய் பகுதி முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகிறது. இந்தமாதிரி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதனால்தான் அர்ஜூனாவை துணைக்கு அழைக்கிறார்கள் முன்னோர்கள். 

கிருஷ்ணபரமாத்மாவுக்குப் பிரியமானவன் அர்ஜுனன். அவன் பெயரை மனதார உச்சரிப்பதால் மனதுக்கு இதமாக இருக்கும். மனதில் ஆன்மிக ஞானம் பெருகும். அதே நேரம் அறிவியல் ரீதியாக இடி இடிக்கும் போது காதுப்பகுதி அடைக்க கூடாது என்பதாலேயே இதில் அறிவியலும் இணைகிறது.

அதனால் மனதுக்குள் அர்ஜுனனை  உச்சரிக்காமல் அழுத்தம் திருத்தமாக உரக்க சொல்லுங்கள் கிருஷ்ண பரமாத்மாவின் பிரியத்துக்குரிய அர்ஜூனனுக்கும் கேட்கும்படி…

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP