Logo

கோயில் கருவறையில் , அம்மன் ஒற்றை காலில் தவம் செய்வது போல் காட்சியளிப்பு !! என்ன பலன் ?

 | 

இந்திய தேசத்தில் அம்மனின் 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமானது காஞ்சிபுரம் காமாட்சி கோயில் இங்கு ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் இங்கு அம்மன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

யுகங்கள் தோரும் பல மகாத்மாக்களால் பாடப்பெற்றவள் இந்த அன்னை. துர்வாச முனிவரால் கிருத யுகத்திலும் பரசுராமரால் த்ரேதா யுகத்திலும் தவுமியான்யரால் துவா பார யுகத்திலும் கலியுகத்தில் சங்கரராலும் பாட பெற்றவள்.

ஆதி சங்கரர் தனது ஆனந்த லஹரியை இந்த காமாட்சி அம்மன் முன் பாடியுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா கோயில்களும் இந்த காமாட்சி அம்மனை நோக்கியே அமைந்துள்ளது . இந்த அன்னையின் அருளாற்றல் அளப்பரியது யுகம் யுகமாக இவள் அருளை பொழவதால் காஞ்சி காமகோடி என இத் தலம் அழைக்க படுகிறது.மேலும் இந்த பகுதியில் எந்த கோயில் திருவிழாவாக இருந்தாலும் உற்சவ மூர்த்தி தங்கள் கோயிலை சுற்றாமல் காமாட்சி அம்மனையே சுற்றி வருவது வழக்கம் .

காஞ்சிபுரத்தி ல் நிறைய சிவாலயங்கள் உள்ளன ஆனால் அம்பாள் கோயில் என்றால் காமாட்சி அம்மன் கோயில் ஒன்று தான். இத்த கோயில் கருவரையில் மூல விக்ரகத்திற்கு அருகில் அம்மன் ஒற்றை காலில் தவம் செய்வது போன்ற அமைப்பு உள்ளது .

இது யாரும் பார்த்திடாத ஒன்று. துர்வாச மகரிஷி மிக சிறந்த தேவி உபாசகர் இவர் தேவியின் மீது லலிதா சகஸ்ரநாமம் இயற்றியவர் . காமாட்சி அம்மன் முதன் முதலில் இவருக்கு காட்சி கொடுத்திருக்கிறார் .

இந்த கோயிலில் உள்ள மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர் இவரே . காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக இருந்திருக்கிறாள் . ஆதி சங்கரர் வந்து இங்கு அம்மனுக்கு முன்பு ஸ்ரீ சக்ரத்தை நிறுவி அம்மனின் உக்கிரத்தை அருள் சக்தியாக மாற்றியதாக சொல்கிறார்கள்.

அன்னை பண்டாசுரன் எனும் அரக்கனை இத்தலத்தில் சம்ஹாரம் செய்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த அன்னை கைகளில் கரும்பும் புஷ்ப பானமும் வைத்திருப்பது குறித்து காஞ்சி யெரியவர் காம விகாரத்தை ஏற்படுத்தும் மன்மதனிடம் இருந்து கரும்பையும் புஷ்ப பானத்தையும் பிடுங்கி தான் அதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறுவார்.

இத்தலம் குழந்தை வரமருளும் முக்கிய ஸ்தலமாகும். இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கியவர்கள் அன்னையின் அருளால் குழந்தை வரம் பெருகிறார்கள். தசரதர் இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்த பிறகே ராம லஷ்மணர்கள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன .

இங்கு நவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள அன்னபூரணி சந்நிதி விஷேசமானது . இங்கு பிக்ஷதுவாரம் என்கிற அமைப்பு உள்ளது . ஐப்பசியில் நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்று பிக்ஷ துவாரத்தின் வழியாக பவதி பிக்‌ஷாம் தேஹி என்று கூறி பிக்சை கேட்பது போன்று வழிபட வேண்டும் என்பது விதி. இப்படி செய்தால் அன்னை நம்மை எப்போதும் அன்னதிர்ௐரு குறைவுபடாமல் அன்னத்தை அளித்து காப்பாள் என்பது நம்பிக்கை .

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP