Logo

சங்கடஹர சதுர்த்தியில் , இதை செய்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும் !!

 | 

மாதங்கள் தோறும் சிவனாருக்கு சிவராத்திரி வரும். பெருமாளுக்கு ஏகாதசி வரும். முருகனுக்கு சஷ்டி உண்டு. இந்த நாட்களில் அந்தந்த இறைவனை வணங்கச் சொல்கிறார்கள் முன்னோர்கள். இதேபோல், தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவோம்.

வளர்பிறை பஞ்சமியில் வாராஹிதேவியை வழிபடுவோம். முதற்கடவுளான விநாயகப் பெருமானுக்கு உரிய நாளாக, தேய்பிறையில் வரும் சதுர்த்தி , சங்கடஹர சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது. இந்த நாள், விநாயகப் பெருமானை ஆராதிக்கவேண்டிய நன்னாள்.

எந்த இறைவனை வழிபடுவதாக இருந்தாலும் முன்னதாக, முதலாவதாக கணபதியை தொழுவது வழக்கம். அப்படியிருக்க, விநாயகப் பெருமானுக்கு உரிய நன்னாளில் அவரை ஆத்மார்த்தமாக வணங்குவோம். வீட்டில் விளக்கேற்றுங்கள். முடிந்தால் அருகம்புல் கொண்டு மாலை சார்த்துவது சிறப்பு.

வெள்ளெருக்கு மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் பல நன்மைகளைத் தந்தருளும். ஆனைமுகத்தானை வழிபடுங்கள். முடிந்தால் , சுண்டல் அல்லது கொழுக்கட்டை அல்லது பாயசம் என நெய்வேத்தியம் செய்து வழிபடுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் நமக்கு சந்தோஷங்களை அள்ளித்தருவார் பிள்ளையாரப்பன்..

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP