இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...

ருக்மணி தேவி இந்தத் துதியை சொல்லித்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மணந்தாள். பார்வதி தேவி உமாதேவியாக பூமியில் அவதரித்தபோது பராசக்தியை வணங்கி இந்தத் துதியைப் பாடியதால்

இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...
X

குறித்த வயதில் திருமணம் நடக்காமல் தள்ளிகொண்டே போகிறது என்று கவலை கொள்ளும் கன்னிப்பெண்கள் நல்ல குணமுள்ள கணவன் கிடைக்கவும், திருமணம் விரைவில் கைகூடவும் கீழ்க்கண்ட மந்திரத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.

திருமந்திரம்:

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகிஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
கர்ஷய ஸ்வாஹா

விளக்கம்:
ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

மேற்கண்ட இந்த மந்திரம் தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று அழைக்கப்படுகிறது. ருக்மணி தேவி இந்தத் துதியை சொல்லித்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மணந்தாள். பார்வதி தேவி உமாதேவியாக பூமியில் அவதரித்தபோது பராசக்தியை வணங்கி இந்தத் துதியைப் பாடியதால் தான் பரமேஸ்வரனை மணந்தாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணப்பேறு வேண்டுபவர்கள் இந்தத் துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்க வேண்டும். மாலை வேளையில் வீட்டை யும் பூஜையறையையும் சுத்தம் செய்து, அகல் விளக்கேற்றி நைவேத்யமாக பிரசாதம் செய்து படைக்க வேண்டும். பிறகு அம்பாளை நினைத்து இந் தத் துதியைப் பாராயணம் செய்து வந்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு உண்டாகும்.

தொடர்ந்து 90 நாட்கள் செய்து வந்தால் விரைவில் திருமணப்பேறு பெறலாம். மேலும் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல செளபாக்கியங்களும் தேவியின் அருளால் கிட்டும்.

newstm.in

Next Story
Share it