மனித நேயம் என்பது

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்னும் ஆவலில் மனிதர்களுக்குரிய உயர்ந்த பண்பு களை வளர்க்காமல் அவர்களை சோம்பேறிகளாகவும்விட்டுவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு

மனித நேயம் என்பது
X

மனிதனாக பிறந்தவர்கள் பிறருக்கு உதவி புரியவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் மனிதநேயத்தோடு பிறருக்கு தொல்லைத் தராமல் வாழ்ந்தாலே போதும் என்று சொல்வார்கள். அதை உணர்த்தும் கதை ஒன்றைப் பார்க்கலாம்.

இராமாபுரி என்னும் நகரை தர்மசேனன் என்னும் அரசர் ஆண்டுவந்தார். மக்களுக்கு குறைகள் நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.குறை என்று யார் வந்தாலும் உடனடியாக அதை நிறைவேற்றிட வேண்டும் என்றும் தளபதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கட்டளை இட்டிருந்தார். தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பது அந்த ஊரில் பலனில்லாது போயிற்று.

நல்மனம் மிக்க அரசரின் எண்ணத்துக்கு மாறாக மக்கள் அனைவரும் சுயநலமிக்கவர்களாக இருந்தார்கள். வேண்டியது எதுவாயினும் அரசரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று சோம்பேறியாக இருந்த மக்கள் சுயநலமாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் ஒற்றுமையின்றி இருந்தார்கள். அவர்க ளுக்குள் மனித நேயம் என்பது கேள்விக்குரியதாக இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி புரிவதும் மறைந்து வந்தது.

மறுபக்கம் அரசரின் கஜானா காலியாகிக்கொண்டே இருந்தது. இப்படியே போனால் நாடு என்னாவது. உழைக்காமல் தான் தோன்றிதனமாய் இருக் கும் மக்களைக் கண்டு அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும் வருத்தமாக இருந்தது. மக்கள் சுயநலத்தோடு மனித நேயமில்லாத பண்பு குறித்த வருத்தம் இருந்தாலும் அரசரிடம் யார் சொல்வது என்று தக்க சமயத்துக்காக எதிர்பார்த்திருந்தார்கள்.

அச்சமயம் துறவி ஒருவர் வந்திருந்தார். அவர்தான் நமக்கு உதவுவார் என்று அமைச்சர்களும் தளபதியும் அவரை சந்தித்து விஷயத்தைக் கூறி னார்கள். கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன துறவி அரண்மனைக்கு சென்றார். அவரை அன்போடு உபசரித்து வர வேற்ற அரசரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உதவி வேண்டி வந்த மக்களுக்கு இன்முகத்துடன் உதவி செய்வதைக் கவனித்தார்.

துறவி அரசரிடம் மக்கள் மனம் கோணாமல் உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் அவர்களும் உங்களைப் போன்று பரஸ் பரம் ஒருவருக்கொருவர் உதவி புரிபவர்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் உழைக்கவும் தயாராகவில்லை. அப்படி யில்லை என்பது தான் எனக்கு வருத்தமளிப்பதாக இருக்கிறது என்றார். அரசருக்கு ஒருபுறம் அதிர்ச்சி. உண்மையாகவா சொல்கிறீர்கள். மக்கள் அனைவரும் மனித நேயத்தோடு இருப்பதாக அல்லவா நினைத்திருந்தேன் என்னால் நம்ப முடியவில்லையே என்றார்.

விருந்து ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் சிறிய விஷயம் மூலம் மக்களின் மனித நேயத்தை உணர்ந்துகொள்வீர்கள் என்றார். அரசரும் சம்மதித்து விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார்கள் துறவியின் யோசனை படி மக்கள் கைகழுவும் இடத்தில் மிகப்பெரிய முள்கள் பதிந்த கட்டை ஒன்று போடப்பட்டது. மக்கள் அங்கு வரும்போதெல்லாம் இதையார் இங்கே போட்டது என்று சலித்தப்படி கடந்து சென்றார்கள். சிலர் தெரியாமல் அதன் மீது இடித்துக்கொண்டு விட்டார்கள். அப்போதும் யாரும் அதை தள்ளி வைக்கவோ அடுத்து வருப வர்களுக்கு அறிவுறுத்தவோ இல்லை.

நடப்பதை அரசரும் துறவியும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். இறுதியாக வயது முதிர்ந்த கண் பார்வை மங்கிய முதியவர் ஒருவ ரின் காலில் முள் பதிந்த கட்டை பட்டது. அதைக் கண்டு பதறிய அரசர் அங்கு செல்லமுனைந்த போது துறவி அரசரைத் தடுத்தார். பிறகு மெது வாக அந்த முதியவர் காலின் அருகில் கிடந்த கட்டையை மெதுவாக உருட்டியபடி நடமாட்டம் இல்லாத பகுதியில் தள்ளி வைத்தார்.

அரசருக்கு தான் செய்த தவறு புரிந்தது.மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்னும் ஆவலில் மனிதர்களுக்குரிய உயர்ந்த பண்பு களை வளர்க்காமல் அவர்களை சோம்பேறிகளாகவும்விட்டுவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது புரிந்து விட்டது என்றார். அங்கிருந்த மக்கள் அதைக் கண்டு தலை குனிந்தார்கள்.newstm.in

newstm.in

Next Story
Share it