எத்தனை முறை தெய்வங்களை வலம் வரலாம்?

அம்பாள் - 4, 6, 8 என இரட்டைப்படையில் வலம் வருவது நலம் பயக்கும் தட்சிணா மூர்த்தி - 3 முறை சோமாஸ் சுந்தர் - 3 முறை விஷ்ணு - 4 முறை தாயார் - 4 முறை அரசமரம் - 7 முறை அனுமான் - 11 அல்லது 16 முறை

எத்தனை முறை தெய்வங்களை வலம் வரலாம்?
X

ழிபாட்டிற்காக மனத் தூய்மையுடன் நாம் ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு வரும்பொழுது, நம்மையே அறியாமல் கோயிலை ஒரு முறையேனும் சுற்றி வலம் வருகிறோம். அப்படி கோயிலை சுற்றி வலம் வருகையில், நமக்குப் புண்ணியங்கள் வந்து சேர்வதாக ஐதீகம்.

எந்தக் கோயிலில் எத்தனை முறை சுற்றி வலம் வரலாம்

விநாயகர் - 1 அல்லது 3 முறை:-

விநாயக கோயிலில், ஒரு முறை சுற்றி வலம் வந்தாலே போதுமானது. இதனால், நமது செயல்களில் ஏற்படும் தடைகள் நீங்கி, இயல்பாகவே வெற்றிகள் வந்து சேர்ந்துவிடும்.

முருகன் - 6முறை :-

முருகப் பெருமான் கோயிலில், ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால், எதிரிகளை வெல்லக்கூடிய திறமையும், கூர்ந்த மதியும் ஏற்படுகிறது.

சிவபெருமான் - 3, 5, 7 என ஒற்றைப்படையில் வலம் வருவது நலம் பயக்கும்.இதனால், எண்ணியது நிறைவேறும். மீண்டும் பிறவா நிலை, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

நவக்கிரகம் - 3 அல்லது 9

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றினால் நன்மை பயக்கும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர்.

கதிரவன் (சூரியன்) - 2 முறை

அம்பாள் - 4, 6, 8 என இரட்டைப்படையில் வலம் வருவது நலம் பயக்கும்

தட்சிணா மூர்த்தி - 3 முறை

சோமாஸ் சுந்தர் - 3 முறை

விஷ்ணு - 4 முறை

தாயார் - 4 முறை

அரசமரம் - 7 முறை

அனுமான் - 11 அல்லது 16 முறை

newstm.in

Tags:
Next Story
Share it