Logo

சாய்பாபாவின் இந்த அன்பை அவர் தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.

ஸத்குருவின் மற்றொரு பக்தரான பந்த் என்பவர் ஷீரடிக்கு வரும் நேர்ந்தது. அவருக்கு ஷீரடிக்குச் செல்லும் எண்ணமில்லை. ஆயின் மனிதன் ஒரு மாதிரி எண்ணுகிறான். கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுத்துகிறார். அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, ஷீரடிக்குப் போய்க் கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும், காண நேர்ந்தது. அவர் கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்.
 | 

சாய்பாபாவின் இந்த அன்பை அவர் தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.

ஸத்குருவின் மற்றொரு பக்தரான பந்த் என்பவர் ஷீரடிக்கு வரும் நேர்ந்தது. அவருக்கு ஷீரடிக்குச் செல்லும் எண்ணமில்லை. ஆயின் மனிதன் ஒரு மாதிரி எண்ணுகிறான். கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுத்துகிறார். அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, ஷீரடிக்குப் போய்க் கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும், காண நேர்ந்தது.  அவர் கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்.  அவரால் இயலாது என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர்.  பின்னர், ஷீரடி விஜயத்திற்காகத் தனது ஸத்குருவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் ஷீரடிக்குப்  புறப்பட்டார்.

 எல்லோரும் மறுநாள் ஷீரடியை அடைந்து மசூதிக்குச்  சுமார்  11 மணிக்குச் சென்றனர்.  சாய்பாபாவின் வழிப்பாட்டுக்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர்.  ஆனால், பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார்.  அவர்கள் எல்லோரும் பீதி அடைந்தனர்.  எனினும் அவரை த் திரும்ப உணர்வுக்குக் கொண்டு வர தங்களால் இயன்றதைச் செய்தனர். சாய்பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட நீராலும் அவர் பிரக்ஞைக்கு வந்து, அப்போது தான்  துக்கத்திலிருந்து  விழித்தவர்ப்போல் எழுந்து உட்கார்ந்தார்.  மற்றொரு குருவின் சீடர் அவர் என்று அறிந்து கொண்ட சர்வாந்தர்யாமியான  சாய்பாபா அஞ்சாமலிருக்கும்படி, அவருக்கு உறுதி கூறி, அவரது சொந்த குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கீழ்கண்டவாறு அவரிடம் கூறினார்.  " வருவது வரட்டும், விட்டு விடாதே. உனது ஆதாரத்தையே  (குருவையே)  உறுதியாய்  பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்”.  இம்மொழிகளின்  குறிப்பை  பந்த்  உடனே அறிந்து கொண்டார்.  இவ்விதமாக அவர்  தமது ஸத்குருவை நினைவு கூர்ந்தார்.   சாய்பாபா வின் இந்த அன்பை அவர் தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP