செருத்துணை நாயனார்

எம்பெருமானுக்குரிய பூஜை மலர்களை எடுத்து அசுத்தம் செய்வதா என்று அரசியின் கூந்த லைப் பிடித்து தள்ளி அப்போதும் ஆவேசம் தீராமல் தம்மிடமிருந்த அரிவாளால் அவரது மூக்கை அரிந்தார்.

செருத்துணை நாயனார்
X

வளமும் செல்வமும் கொழிக்கும் தஞ்சையில் வேளாண் மரபில் பிறந்தவர் செருத்துணை நாயனார். சிறுவயது முதலே சிவனின் பாதம் பணிந்து வந்த இவர் தமக்கு எல்லாமே எம்பெருமான் பாதமே என்று வாழ்ந்துவந்தார். எந்நேரமும் எம்பெருமானின் பாத கமலங்களையே பற்றி இருந்தார்.

சிவனுக்கு தொண்டு செய்யும் பொருட்டு சிவாலயத்தில் சிவ பூஜைக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படா வண்ணம் காத்தார். சிவனடி யார்களுக்கு எவ்வித துன்பமும் நேராமலும் பார்த்துக்கொள்வதை தமது பணிகளில் ஒன்றாக ஆக்கி கொண்டார். யாராவது அறிந்தும் அறி யாமலும் அவர்களுக்கு ஊறுவிளைவித்தால் அவர்களைக் கண்டிக்கவும் சில சமயத்தில் கடுமையாக தண்டிக்கவும் செய்துவிடுவார்.

சிவனுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் அனைத்து பொருள்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இறைவனுக்கு பயன்படுத்தப்படும் மலர்கள் சுத்தமான இடத்திலிருந்து சுத்தமான முறையில் எடுத்துவந்து பூஜைக்கு உட்படுத்துவார்கள். இவற்றில் சிறுகுறையுமின்றி பார்த்துக்கொண்டார் செருத்துணையார்.

ஒருநாள் ஆலய மண்டபத்தினுள் அமர்ந்து பூஜைக்குரிய மலர்களை மாலையாக தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த பல்லவ மன்னனான கழற்சிங்கரது பட்டத்து அரசியார் அங்கிருந்த மலரின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு மலரை எடுத்து உச்சி மோர்ந்தார். அதைக் கண்ட செருத்துணையார் எம்பெருமானுக்குரிய பூஜை மலர்களை எடுத்து அசுத்தம் செய்வதா என்று அரசியின் கூந்த லைப்பிடித்து தள்ளி அப்போதும் ஆவேசம் தீராமல் தம்மிடமிருந்த அரிவாளால் அவரது மூக்கை அரிந்தார்.

அரசியின் மூக்கை அரிந்ததைக் கேள்வியுற்ற மன்னன் அந்த இடத்துக்கு கோபமாக வந்தார். ஆனால் இத்தகைய செயலை செய்திருப்பது சிவனடியார் என்றதும் காரணமின்றி இதைச் செய்திருக்க மாட்டார் என்று நினைத்து செருத்துணை நாயனாரிடம் கேட்டு நடந்ததை அறிந்தார். பிறகு மலரை எடுத்த கையையும் அல்லவா அறுத்தெரிய வேண்டும் என்று கைகளை வெட்டினார்.

இவர்களது பக்தியைக் கண்டு மெச்சிய எம்பெருமான் இவர்களுக்கு காட்சிதந்து, அரசியாரை விழிக்க செய்தார். மூவருக்கும் அருள் புரிந் தார். இவ்வாறு சிவத்தொண்டு புரிந்து வந்த செருத்துணை நாயனார் இறுதியில் சிவனது பாதத்தை தழுவினார். சிவாலயங்களில் செருத் துணை நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it