Logo

ஹரியும் சிவனும் ஒண்ணு.. நிரூபனமாகும் சான்று...

இன்றும் சைவம் தான் பெரியது என்றும்? வைணவம் தான் பெரியது? என்றும் சிலர் காரண காரியங்களோடு வாதிடுகிறார்கள். ஆனால் ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாத வர் வாயில் மண்ணு என்று சொல்வதுதான் மிக பொருத்தமாக...
 | 

ஹரியும் சிவனும் ஒண்ணு.. நிரூபனமாகும் சான்று...

இன்றும் சைவம் தான் பெரியது என்றும்? வைணவம் தான் பெரியது? என்றும் சிலர் காரண காரியங்களோடு வாதிடுகிறார்கள். ஆனால் ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயில் மண்ணு என்று சொல்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.

 மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களிலும் சிவனை  பூஜித்து வழிபட்டிருப்பதற்கான சான்றுகள் உண்டு. அதைச் சுருக்கமாக பார்க்கலாம்.
 மச்ச அவதாரம்:
சோமுகாசுரன் வேதங்களைத் திருடி கடலுக்கடியில் நுழையும் போது திருமால் சுறா மீனாக உருமாறி அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். அந்த மகிழ்ச்சியோடு கடலுக்குள் சென்று மகிழ்ச்சியோடு விளையாடினார். இதனால் உலகமே துன்பத்தை அடைந் தது.  சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்து  திருமாலுக்கு தவறை உணர்த்தினார்.திருமால் மச்ச அவதாரம் எடுத்து  பல காலம்  சிவபூஜை செய் ததாக வரலாறு சொல்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 16 கால் மண்டபத்தில் தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கி கொண்டு மீன் உருவத்தில் பெருமாளும் இருக்கிறார்கள்.

கூர்ம அவதாரம்:
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது, மத்தாக இருந்த மந்திர மலை கடலில் மூழ்காமல் இருக்க ஆமை வடிவெடுத்து மலையைத் தாங்கினார் பெருமாள். மலையைத் தாங்கும் சக்தியைத் தர வேண்டி சிவபெருமானை வேண்டினார் பெருமாள். காஞ்சிபுரத்தில் திருக் கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம்  உண்டாக்கி  சிவனை பூஜித்ததாக வரலாறு உள்ளது,

வராக அவதாரம்:
இரண்யாட்சன் என்னும் அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி அவனை அழித்தார். கோபம் கொண்ட பெருமாளின் சினத்தைச் சிவபெருமான் தணித்தார்.

நரசிம்ம அவதாரம்:
பக்த பிரகலாதனை இரண்யகசிபுவிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரண்யனைக் கொன்று உக்கிரமானார் அவரது உக்கிரத்தைத் தணிக்க அதை விட உக்கிரமாய் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். புதுச்சேரி வில்லியனூர்  தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் சிவபெருமானைத் தரிசிக்கலாம்.

வாமன அவதாரம்:
மலை நாட்ட ஆண்ட  மகாபலியின் ஆணவத்தை அடக்க குள்ள அந்தணன் வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பிய பாவத்தைத் தீர்க்க சிவபெருமானை அணுகினார். அந்தத் தலமே  கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழி.

பரசுராம அவதாரம்:
ஜமதக்னி முனிவரின் மகனாய் பிறந்து தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்த தாயின் தலையைக் கொய்து அவ ளுக்கு மீண்டும் உயிர்வரம் கேட்ட அவதாரம் இது. மன்னர்களின் செருக்கை அடக்கியதோடு  திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் மயி லாடுதுறை அருகிலுள்ள திருநின்றவூர்.

இராம அவதாரம்:
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தும் பொருட்டும், பெற்றோர்கள் சொல் கேட்டு நடப்பதை வலியுறுத்தவும், சிவபக்தனாக இருந் தாலும் காமத்துக்கு அடிமைப்பட்ட  அரக்கனாக இருந்தால் அவனை அழிக்கவும் தயங்கக்கூடாது என்பதை உணர்த்தவும் எடுக்கப்பட்ட அவதாரம் இது இராமனாக அவதாரம் தரித்த திருமால் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாயிருந்தார். இதுதான் இராமேஸ்வரம் கோயில். இராமநாமத்தை சிவனே உச்சரிப்பதாக வரலாறு.

பலராம அவதாரம்:
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாக வரலாறு. திருமால் அதனை கெளர விக்க தன் அண்ணனாக பலராமனை உருவெடுக்க செய்தார். வேதாரண்யம் கோடியக்கரை குழகர் கோயில் பலராமர் வழிபட்ட தலம்.

கிருஷ்ண அவதாரம்:
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமான இருந்து குருஷேதர யுத்தத்துக்கு காரணமாய் விளங்கியதாக பாகவதம் கூறுகிறது. கண் ணன் தன்னுடய வினைகள் தீர  திருவாரூர், தஞ்சாவூர்  சிவபெருமானை பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP