நாளை சாம்பல் புதன்!! தவக்காலம் தொடக்கம்!

இந்த ஆண்டிற்கான தவக்காலம் நாளை (26-ம் தேதி) சாம்பல் புதன் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. தவக்காலத்தின் தொடக்க நாளாகிய நாளை அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் மனந்திரும்பி நற்செய்தியை

நாளை சாம்பல் புதன்!! தவக்காலம் தொடக்கம்!
X

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தவக்காலம் நாளை (26-ம் தேதி) சாம்பல் புதன் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. தவக்காலத்தின் தொடக்க நாளாகிய நாளை அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் மனந்திரும்பி நற்செய்தியை நம்பு என்று சொல்லி சிலுவை அடையாளமிடுவார்.

நாளை சாம்பல் புதன்!! தவக்காலம் தொடக்கம்!

இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளைஆலயத்தில் கொண்டு கொடுக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். அந்த சாம்பலே கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலாகப் பூசப்படும்.

நாளை சாம்பல் புதன்!! தவக்காலம் தொடக்கம்!

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தில் பல்வேறு பக்தி முயற்ச்சிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடைபெறும்.

newstm.in

Tags:
Next Story
Share it