நமது கர்மத்தையும் சுமக்க விரும்பும் கடவுள்...

பக்தர்களுக்கு இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். அவனுக்கு பெருமையும் இருக்காது. அகங்காரமும் இருக்காது. நான் என்ற எண்ணமும் அறவே இருக்காது. இரவும் பகலும் அவனுக்குத் தெரிந்த மந்திரமெல்லாம்...

நமது கர்மத்தையும் சுமக்க விரும்பும் கடவுள்...
X

வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பிறரை அண்டியே வாழவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்வு முழுமைக்கும் எங்களுக்கு கைகொடுக்கும் தெய்வம் எங்கள் குருவான பாபா மட்டுமே என்கிறார்கள் பாபாவின் பக்தர்கள்.பாபா பக்தர்களைப் போல் வேறு மகான்களை குருவாக கொண்ட பக் தர்களும் உண்டு.

குரு என்பது மும்மூர்த்திகளைக் குறிக்கிறது. குருவானவர் மும்மூர்த்திகளின் அவதாரமே. குரு திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் மகிழ்வடை வார்கள். குருவுக்கு கோபத்தை உண்டாக்கினால் மும்மூர்த்திகளின் அருளை பெறமுடியாது. குருவானாவர் மனிதர்களுடன் பழகி நல்லது கெட்ட தைக் கற்றுக்கொடுத்து நன்மார்க்கம் செல்வதற்கு வழி காட்டுவார். அத்தகைய குரு ஞானஜோதி சொரூபம்.

இவர்களைக் குருவாக பெற்றவர்களுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி கிடைக்கிறது. பக்தியுடன் குருவை வணங்குபவனுக்கு தெய்வமும் துணை நிற்கிறது. நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து நம் குருவின் பாதகமலத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் குருவின் அருளை இதயத்தில் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி கொள்ள பக்தர்கள் முயல வேண்டும்.உள்ளுக்குள் எப்போதும் குரு சிந் தனை இருந்தால் வேகமாக உலக பற்றிலிருந்து விடுபட முடியும்.

பாபாவின் பக்தர்களுக்கு பாபா சொல்வது கர்மாவை தைரியமாக அனுபவிக்க கற்றுக்கொள். கஷ்டம் தெரியாமல் நான் கரையேற்றிவிடுகிறேன் என்பது தான். இந்த வார்த்தைகளின் ஆழத்தை உணர்ந்தவன் நிச்சயம் ஆன்மிக ஞானம் உள்ளவனே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.எத்தகைய துன்பத்திலும் உன்னை காக்க நான் இருக்கிறேன் என்னும் நம்பிக்கை உன் மனதில் ஆழ வேரூன்றி விட்டால் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் வேண்டாமே.ஏனெனில் உங்கள் துன்பத்தை அது கருமமாகவே இருந்தாலும் நான் சுமக்க காத்திருக்கிறேன் என்கிறார் பாபா.

பஞ்ச பூதங்களாலான மனித சரீரம் இவ்வுலகில் அழிவை சந்திக்கும். ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை. அதுதான் பரம்பொருள். அழியாத பரம் பொருள். இதுவே பரிபூரண உண்மை. இந்த புனிதத்தை உணர்ந்துகொண்டாலே பாபாவின் அருளை புரிந்துகொண்டதாக கொள்ளலாம்.மாறாக உலக இன்பத்தில் நாட்டம் கொண்டு பேராசையை வெல்லாதவரை என்றுமே பாபாவின் அருகாமையை உணரமுடியாது.

பாபாவின் பக்தர்களுக்கு இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். அவனுக்கு பெருமையும் இருக்காது. அகங்காரமும் இருக்காது. நான் என்ற எண்ணமும் அறவே இருக்காது. இரவும் பகலும் அவனுக்குத் தெரிந்த மந்திரமெல்லாம் சாயி சாயி மட்டும்தான். தாங்கள் செய்வது அனைத் தும் சரியா தவறா என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு பாபாவின் பக்தர்கள் முயற்சிப்பதில்லை.

ஜாதகம், கைரேகை போன்றவற்றில் பாபாவின் பக்தர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. ஏனெனில் எதுவும் பாபாவின் அனுமதியின்றி நடப்ப தில்லை. பாபாவை மீறுவதுமில்லை. தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் சக்தியைத் தான் பக்கிரி கையில் வைத்திருக்கிறானே. இன்னும் சொல்ல போனால் ஆடுபவனும் அவனே ஆட்டுவிப்பவனும் அவனே என்பதால் பாபாவின் பக்தர்களுக்கு எல்லாமே எல்லாமுமாய் இருப்பது பாபா தான். சாய் ராம்.

newstm.in

newstm.in

Next Story
Share it