பாவங்கள் நீங்கி செல்வம் பெருக இன்று மூன்றாம் பிறையை மாலையில் பாருங்கள்..!!

பாவங்கள் நீங்கி செல்வம் பெருக இன்று மூன்றாம் பிறையை மாலையில் பாருங்கள்..!!

பாவங்கள் நீங்கி செல்வம் பெருக இன்று மூன்றாம் பிறையை மாலையில் பாருங்கள்..!!
X

அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும், ஆயுளும் கூடும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்துவிட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.

1

மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?
சிவன் தன் தலையின் வலப்பக்கம் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். அமாவாசைக்கு மறுநாளில் இருந்து சந்திரன் வளரும். மூன்றாம் நாளில் தெளிவாக தெரியும். நான்காம் நாளில் இருந்து சந்திரனின் மீது நிழல் விழுவதால், களங்கம் அடைவதாக சொல்வர். மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார். ஆகவே மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

Next Story
Share it