கனவில் உணவு, நனவில் தட்சிணை

கனவில் உணவு, நனவில் தட்சிணை

கனவில் உணவு, நனவில் தட்சிணை
X

சாய்பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் ஜி.எஸ். கபர்தே. அவருக்கு ஒரு மகன். பலவந்த் என்று பெயர். அவன் ஒரு நாள், ஒரு கனவு கண்டான். தான் கண்ட கனவை, மறுநாள் அவன் உணர்ச்சிப் பெருக்குடன் தந்தையிடம் கூறினான். கனவில், அவர்களது வீட்டுக்கு சாயிபாபா வந்திருந்ததாகவும், தான் அவரை அன்புடன் வரவேற்று உணவு பரிமாறியதாகவும் பலவந்த் தெரிவித்தான்.

மகன் கண்ட கபர்தே நம்பத் தயாராக இல்லை. இது வெறும் கற்பனையால் ஏற்ப்பட்ட குழப்பம் என்று உறுதிபடக் கூறிவிட்டார். அவனும் வேறு யாரிடமும் இதைப் பற்றிக் கூறாமல் இருந்து விட்டான்.தந்தையும் மகனும் அன்று சாயிபாபாவை தரிசிக்கச் சென்றனர்.சாயிபாபா மகனும் அன்று சாயிபாபாவை தரிசிக்கச் சென்றனர். சாயிபாபா, பலவந்த்தை அருகில் அழைத்தார்.

"நான், நேற்று உன் வீட்டுக்கு வந்திருந்தபோது நீ விருந்து மட்டும்தான் தந்தாய். ஆனால், ஏன் எனக்குத் தட்சணை எதுவும் தரவில்லை? சரி. அதை இப்போது வாங்கிக் கொள்கிறேன். தட்சணையாக இருபத்தைந்து ரூபாய் நீ தரவேண்டும்!" என்று மிகுந்த உரிமையுடன் கேட்டார்.
பவ்வந்த் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தான் தங்கியிருந்த இடத்துக்கு ஓடிச் சென்று தட்சிணைப் பணத்தைக் கொண்டு வந்து சாய்பாபாவிடம் சமர்ப்பித்தான்.

கனவில் உண்ட உணவுக்கு நனவில் தட்சணை பெற்ற கருணையை எண்ணி எண்ணித் தந்தையும் மகனும் கண்ணீர் பெருக்கி உருகினர்.

"எவன் என்னை மிகவும் விரும்புகிறானோ,
அவன் என்னை எப்போதும் காண்கிறான்"
- ஷீரடி சாய்பாபா

ஆன்மீக எழுத்தாளர்
Dr.V.ராமசுந்தரம்.

Next Story
Share it