பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!
X

தமிழகம் முழுவதும் மகாளய அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை கொடுக்க தடை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்துக்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன் தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை எனில் மகாளய அமாவாசை தினத்தில் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் பித்ருக்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.

இது குறித்து ராமேசுவரம் புரோகிதர் ராமச்சந்திரன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மகாளய அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிக மிக முக்கியமான நாளாகும். அன்றைய தினம் ஊரடங்கால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் காலையிலேயே தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி விட வேண்டும்.காலையில் முழுவிரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும்.

மேலும் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தும் இருக்க வேண்டியது அவசியம். இதன் பிறகு கடவுளை வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.

Next Story
Share it