அதிதி என்பதன் விளக்கம்

சாய்பாபாவின், முக்கிய பக்தரான சந்தோர்க்கர் , எப்பொழுதுமே அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் வருவதே இல்லை என சாய்பாபாவிடம் கூறிய பக்தருக்கு அதிதி என்பவன் யார் என்பதை விளக்கினார் சாய்பாபா

அதிதி என்பதன் விளக்கம்
X

சாய்பாபாவின், முக்கிய பக்தரான சந்தோர்க்கர் , எப்பொழுதுமே அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சாய்பாபாவிடம், "நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு வைத்து விட்டு அதிதி்களுக்காகக் காத்திருப்பேன். ஆனால் அவர்கள் வருவதே இல்லை. ஏன் சாய்பாபா இப்படி நடக்கிறது ?" என்று வெகுளித்தனமாகக் கேள்வியை கேட்டார் சாந்தோர்க்கர்.

"நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?"என்று அவரிடம் திருப்பிக் கேட்டார் சாய்பாபா. " நமது சாஸ்திரங்களும், வேதங்களும் இப்படித்தானே என்று சாய்பாபா சொல்லி இருக்கிறார். அதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன்" என்றார். "நானா, சாஸ்திரங்களில் தப்பில்லை .வேதங்களிலும் குற்றம் குறையில்லை. ஆனால், அவைகளின் உண்மையான பொருளை சரியாக நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். அதனால் தான் அதிதிகளுக்காகத் தினமும் காத்திருப்பதாக விசனப்பட்டுக் கொள்கிறாய்.

அதிதி என்பவன் யார்?
ஐந்தடி உயரத்தில் பூணூல் அணிந்து கொண்ட பிராமணன் மட்டும் தானா அதிதி? மனித உருவத்தில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவத்தில் இருப்பது கூட அதிதிகள் தான். நீ உணவளிக்கும் போது அதனை உண்பதற்காக பசியுடன் யார் அல்லது எது வந்தாலும் அது அதிதி தான்.
ஐம்பது அல்லது நூறு காக்கைகள் வரும் போது நிறைய அன்னத்தை அவற்றிற்கு வழங்கு. அதனைச் சாப்பிடுவதற்குகாக உரக்கக் கூப்பிட வேண்டாம். உயிருள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று நினை. உன் மனதை இப்போது முதல் இப்படி மாற்றிக்கொள்.
அப்படிச் செய்தால், லட்சக்கணக்கான அதிதிகளுக்கு உணவளித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்” என்று சாய்பாபா விளக்கமளித்தார்.
நானா சந்தோர்கர் தெளிவடைந்தார்.

அதிதி என்பதன் விளக்கம்
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com


newstm.in

Next Story
Share it