பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !
X

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் மீண்டும் மின் இழுவை ரயில் சேவை தொடங்கியுள்ளது.

பழனிக் கோயிலில் மூன்று மின் இழுவை ரயில்களும் 50 சதவிகித பக்தர்களுடன் இயக்கப்படுகிறது. மின்இழுவை ரயிலில் இருவழிப்பாதை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செல்போன், கேமரா போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யமுடியும். எந்த மின் இழுவை ரயில் எந்த நேரத்துக்கு பதிவு செய்யப்பட்டதோ அதில் மட்டுமே பயணிக்க முடியும்.

மின்இழுவை ரயிலில் செல்வதற்கு, 15 நிமிடங்களுக்கு முன்பு காத்திருப்பு மண்டபத்துக்கு பக்தர்கள் வர வேண்டும். அங்கு பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அசல் ஆதார் போன்ற சான்றுகளுடன் நிலையம் வந்துவிட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே, மின்இழுவை ரயிலில் பயணம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் மின் இழுவை ரயில் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் கொரோனா நடைமுறைகளால் மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

newstm.in

Next Story
Share it