Logo

சூரிய கிரகணத்தின் போது இதை மட்டும் செய்ய கூடாது !!

 | 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும்.

இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.

இந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நம் நாட்டில் சூரிய கிரகணத்தை பொருத்தவரை பல்வேறு நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் ஆயுர்வேத முறைப்படி உருவானவையாகும். சூரியன் முழுமையாக தெரியாத காரணத்தினால் சூரிய கிரகணத்தின் நேரமானது , கெட்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால் கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP