மனிதர்களுக்கு கோபம் அதிகமாக வரக் கூடாது !! அப்படி வந்துச்சுனா , இதை மட்டும் செய்யுங்க !!

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அடுத்துள்ள திருநெல்லிக்கா என்னுமிடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் மங்கலநாயகியுடன் நெல்லிவனேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.
இவரை கோபம் உள்ளவர்கள் வணங்கினால் கோபம் குறையும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை..பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தியும் கோவில் திருப்பணிக்கு பொருள் உதவி செய்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
இத்தல இறைவன் சுயம்புவாக உள்ளார் மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஒரு வாரகாலத்திற்கு மாலை வேலையில் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 181 தோவராத்தலமாகும்.
இத்தல இறைவனை பிரம்மா விஷ்னு சூரியன் சந்திரன் சனி கந்தர்வன் தேவலோக மரங்களாக வழிப்பாடு செய்துள்ளனர். எனவே கோபத்தை விட வேண்டும். உடனே விட முடியவில்லை எனினும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று யோகா, தியானப் பயிற்சிகள் வாயிலாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.
Newstm.in