Logo

வேண்டுதல் வேண்டாம். தரிசனமே மோட்சம் தரும்..-அத்திவரதர் வரலாறு.

தீ பட்டு உஷ்ணமானதால் அவரால் வெப்பம் தாங்கமுடியவில்லை.தினமும் நீர் அபிஷேகம் செய்து அவரை குளிர்விப்பதற்கு பதிலாக குளிர்ந்த நிலையிலேயே அவரை வைக்கும் பொருட்டு...
 | 

வேண்டுதல் வேண்டாம். தரிசனமே மோட்சம் தரும்..-அத்திவரதர் வரலாறு.

40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரைத் தரிசித்தால் மோட்சம் கிட்டும் என்று சொல்லும் ஆன்மிக பெரியோர்கள் அவர் ஏன் குளத்துக்குள் வாசம் செய்கிறார் என்ற புராணக்கால வரலாறையும் கூறுகிறார்கள்.

படைக்கும் தொழிலில் ஈடுபடும் பிரம்மன் யாகம் ஒன்றை நடத்துவதற்கு முயன்றார்.யாகம் செய்பவர் யாகத்தின் பலனை முழுமையாக பெற வேண்டுமெனில் தங்களது வீட்டு பெண்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். ஆனால் பிரம்மா சரஸ்வதி தேவியை அழைக்காததால் சரஸ்வதி தேவிக்கு கோபம் உண்டாயிற்று. அதனால்  சரஸ்வதி தேவி யாகத்துக்கு வரவில்லை. 

பிரம்மாவும் அதைப் பற்றி கவலையுறாமல் காயத்ரி மற்றும் சாவித்ரி துணையுடன் யாகத்தைத் தொடங்கினார்.  நான் இன்றி யாகம் நடத்துவதா என்று மேலும் கோபம் கொண்ட சரஸ்வதி வேகவதி ஆறாக மாறி யாகம் நடத்தும் இடத்தில் வெள்ளமாய் ஓடிவந்தாள். பிரம்மனின் யாகம் வெற்றிப்பெற பெருமாள் வேகவதி ஆற்றின் நடுவே சயனக் கோலத்தில் படுத்துவிட்டார்.

அதைக் கண்டு வெட்கிய சரஸ்வதி தேவி இதனால் தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டு விட்டாள். பிரம்மன் நினைத்தபடியே யாகமும் நிறைவுற்றது. தனக்கு உதவி புரிந்த பெருமாளை மகிழ்ந்து வழிபட்ட பிரம்மதேவருக்கும், விண்ணுலக தேவர்களுக்கும் விமானத்தில் சங்கு, சக் கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி கொடுத்த பெருமாள் அவர் கேட்ட வரதங்களைக் கொடுத்து வரதர் ஆனார்.

தங்களுக்கு தரிசனம் கொடுத்த பெருமாளை அதே தினத்தில் அத்திமரத்தால் பெருமாள் உருவமாக்கி வழிபட்டார் பிரம்ம தேவன். தேவலோக ஐரா வத யானை அத்தி வரத பெருமாளை தனது முதுகில் சுமந்துவந்தது. ஐராவதம் சிறு குன்றாக மாறி அத்திகிரி என்னும் பெயரை பெற்றது. அத்தி என்றால் யானை என்று பொருள். பெருமாளும் அந்நிலையில் அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்துவந்தார்.

பிரம்ம தேவர் தன்னால் உருவாக்கப்பட்ட அத்திமர பெருமாளை முன்னிறுத்தி மீண்டும் யாகம் செய்தார். யாகத்தீ பட்டு அத்திபெருமாள் பின்னப் பட்டுவிட்டார். பதறிய பிரம்மா செய்வதறியாமல் பெருமாளையே அழைத்தார். அவருடைய ஆலோசனையின் படி அத்திவரதரை வெள்ளிப்பெட் டியில் வைத்து ஆற்றுக்குள் வைத்தார்.

யாகத்தீயில் உஷ்ணமான பெருமாள் குளிர்ந்த நிலையில் உலகை காக்க அருள்புரிவார் அவரை குளிர்ந்த நிலையில் வைக்க வற்றாத குளத்துக் குள் இருப்பார் என்றும் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வந்து 48 நாட்கள் தரிசனம் தருவார் என்றும் பிரம்மதேவனுக்கு சொல்லப்பட்டது.

மற்றொரு சாரார் பிரம்மதேவன் யாகம் செய்த போது அத்திவரதர் தீ பட்டு உஷ்ணமானதால் அவரால் வெப்பம் தாங்கமுடியவில்லை. அதனால் தினமும் 1008 குடங்களில் அவருக்கு நீர் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வேண்டினார். தினமும் நீர் அபிஷேகம்செய்து அவரை குளிர்விப்ப தற்கு பதிலாக குளிர்ந்த நிலையிலேயே அவரை வைக்கும் பொருட்டு வெள்ளி பெட்டியில் சயன நிலையில் வைத்து குளத்துக்குள் வைத்ததாக வும் கூறுகிறார்கள். இத்தலத்தில் இருக்கும் பெருமாள் சீவரம் என்னும் ஊரில் இருந்து அத்திகிரிக்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

குளிர குளிர குளத்தில் இருக்கும் அத்திவரதர் அதே குளிர்ந்த மனதோடு வெளியில் வந்து வரம் கேளாமல் தரிசிக்கும் பக்தர்களுக்கும் அரிய மோட் சப் பேறை தந்து அருள் புரிகிறார்.

இவரிடம் வேண்டுதல் எதுவும் வைக்க தேவையில்லை. மனமாற ஒருமுறை தரிசனம் செய்தால் போதும் பிறவிபயனை அடைந்துவிடலாம். ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை தரிசனம் தரும் அத்திவரதரைத் தரிசிக்க போகலாமா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP