இதை செய்தால் எல்லா தோசங்களும் நீங்கும் !!

இதை செய்தால் எல்லா தோசங்களும் நீங்கும் !!

இதை செய்தால் எல்லா தோசங்களும் நீங்கும் !!
X

சிலருக்கு ஜாதக கட்டத்தில் ராகு கேது தோஷம் இருக்கும். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை சந்தித்து வருவார்கள். குறிப்பாக இவர்களுக்கு தொடர் தோல்வி இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள், வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு, எள் சாதம் செய்து வைத்து அர்ச்சனை செய்து வரும்பட்சத்தில் ராகு கேது தோஷத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

அல்லது வாரம் தோறும் வரும் சனிக்கிழமையன்று, ஹனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலையை அணிவிக்க வேண்டும். சிலபேருக்கு ஏழரை சனியின் மூலம் அதிகப்படியான பாதிப்பு இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று, அரளிப் பூ அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்தால் ஏழரை வருடத்தில் ஒருமுறையாவது , திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வேண்டும்.

குறிப்பாக அங்கு சென்று கடலில் மூழ்கி குளித்து விட்டு, அதன் பின்பு முருகன் தரிசனம் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரு இரவு, திருச்செந்தூர் முருகன் கோவிலிலேயே தங்கி, மறுநாள் காலை வீடு திரும்ப வேண்டும்.

சில பேருக்கு புதன் தோஷம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இருக்காது. ஞாபக சக்தி குறையும். நல்ல வேலை கிடைக்காது. வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டத்தை எதிர்கொள்வார்கள்.

ஒருமுறை இவர்கள் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்வது நல்லது. முடிந்தால் திருப்பதிக்கு சென்று ஒரு முறை பெருமாளை தரிசனம் செய்யலாம்‌ கீழ் திருப்பதியிலிருந்து நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்வது மேலும் சிறப்பு தரும்.

சிலருக்கு ஜாதகத்தில் சுக்கிரனின் தோஷம் அமைந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் அதிகப்படியான பணக்கஷ்டம் இருக்கும். தொழில் நஷ்டம் இருக்கும். முன்னேற்றத்தில் தடை இருக்கும். பெரிய பணக்காரர்களாக இருந்தால் கூட, அந்த சொத்து வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

இவர்கள் குரு பகவானை வணங்க வேண்டும். அல்லது உயிரோடு இருந்து சமாதி அடைந்த மகான்களை வணங்குவது மிகவும் நல்லது. இதையெல்லாம் தவிர்த்து சில பேருக்கு ஜாதக கட்டத்தில் தோஷம் எல்லாம் எதுவும் இருக்காது.

ஆனால், அவர்கள் எப்போதுமே ஒரு மன அழுத்தத்தோடு இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் மனக்குறைகளை, தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இப்படி மன அழுத்தத்தோடு இருப்பது மிகவும் தவறு. இப்படிப்பட்டவர்களின் மன வேதனையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Newstm.in

Next Story
Share it