சமையல் அறையில் இதைச் செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்கும்!

சமையல் அறையில் இதைச் செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்கும்!

சமையல் அறையில் இதைச் செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்கும்!
X

மது வீடுகளில் பூஜை அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அத்தனை முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் அந்த வீட்டு சமையலறையில் தான் உள்ளது.

இதை உணர்ந்து வீட்டில் சமையலறையை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை உணர்ந்த வீட்டுப் பெண்கள் சமையலறை கட்டுப்பாட்டை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள்.

முதலில் சமையலறையில் உப்பை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையாவது உப்பு வைத்திருக்கும் ஜார்களை சுத்தம் செய்ய வேண்டும். இதே போல் மங்களகரமான மஞ்சள் தூளையும் சுத்தமாக தீருவதற்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய குடம் அல்லது ஒரு சிறிய சொம்பிலாவது தண்ணீர் நிரப்பி சமையலறையில் வைக்க வேண்டும். அதனுடன் சமையல் அறையில் மிக அவசியம் இருக்க வேண்டியது அன்னபூரணி சிலை அல்லது திருவுருவப்படம்.

சமையலறையில் உப்பு, மஞ்சள், தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்வது என்பது எத்தனை அவசியமோ அவ்வளவு அவசியம் அன்னபூரணியின் படமும். தினசரி சமைப்பதற்கு முன் மனதில் அன்னப்பூரணியை தியானித்து பின் சமையலை ஆரம்பித்தால் வீட்டில் பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம்.

அசைவம் சமைப்பவர்களாக இருந்தால் அசைவம் சமைக்கும் போது மட்டும் எடுத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதைத் தவறாமல் கடைப்பிடிப்பவர்கள் வீடுகளில் உணவுப் பஞ்சத்தை தீர்ப்பதோடு ஐசுவரியத்தையும் நிலைக்கச் செய்வாள் அன்னபூரணி.

Next Story
Share it