இறைவன் பொய்யுரைக்கலாமா?

யாருக்கும் தீங்கு நேராத நன்மை தரும் பொய் என்பதால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொய் ஆகிற்று. மனிதர்களாகிய நாம் கூட அப்படித் தான் நாம் சொல்லும் பொய் ஒருவருக்கும் துன்பம்...

இறைவன் பொய்யுரைக்கலாமா?
X

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்று இந்து தர்மம் சொன்னாலும் நமது பொய்யால் மற்றவர்கள் துன்பம் குறையும் என்றாலோ, யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்மைக்கு என்றாலோ பொய் உரைப்பது தவறில்லை என்கிறார்கள் முன்னோர்கள். மகாவிஷ்ணுவே தன் அவதா ரமான ஸ்ரீ இராம அவதாரத்தின் போது பொய் உரைத்திருக்கிறார். நன்மை கருதி சொன்ன பொய் என்றாலும் இறைவனே பொய் சொல்லியிருக்கி றார் என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.

கைகேயி ஸ்ரீ இராமன் காட்டுக்கு செல்ல வேண்டும் என்று தசரதனிடம் வரம் கேட்டாள். தசரதன் ஸ்ரீ இராமனிடம் அஞ்சியபடி அதைத் தெரிவித்தா லும் மனதில் கவலையின்றி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ இராமன். ஸ்ரீ இராமனுக்கு பட்டாபிஷேகம் என்று மக்கள் மகிழ்ந்திருந்த நிலை யில் ஸ்ரீ இராமன் வனவாசம் மேற்கொள்கிறார் என்று கேள்விப்பட்டதும் மக்கள் சொல்லொணாத்துயரை அடைந்தார்கள்.

இன்றிலிருந்து ஸ்ரீ இராமனின் ஆட்சியில் மகிழ்ந்து மலரப்போகிறோம் என்று காத்திருந்த மக்களுக்கு இந்த செய்தி இடி விழுந்தாற் போல் இருந் தது. ஸ்ரீ இராமனைப் பிரிய நாமே இவ்வளவு வேதனைகளை அனுபவிக்கு போது தசரத சக்ரவர்த்தி எவ்வளவு வேதனை அடைவார் என்று நினைத் தார்கள் அரண்மனை வாசிகள். ஆம் சில நாள்கள் கூட ஸ்ரீ இராமரைப் பிரியாத தசரதர் எப்படி 14 ஆண்டுகள் இராமரைப் பிரிந்திருப்பார் என்று கவ லையுற்றார்கள்.

ஸ்ரீ இராமர் வனவாசம் மேற்கொள்ளப்பட்டு தேரில் ஏறி அமர்ந்துவிட்டார். உடன் இலட்சுமணனும், சீதையும் கிளம்பினார்கள். மக்கள் திரண்டு ஸ்ரீ இராமன் நாட்டை ஆள வேண்டும். வனவாசம் போக கூடாது என்று கூச்சல் எழுப்பினார்கள். தேர் நகராமல் தடுத்தார்கள். தசரதர் அரண்மனை உப்பரிகையில் நின்று மக்கள் தடுத்து விட மாட்டார்களா என்று கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தார்.

தசரதருக்கு மட்டுமா வருத்தம் இருந்தது. ஸ்ரீ இராமனுக்கும் தந்தையைப் பிரிவது வருத்தமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார். சுற்றியிருந்த மக்களை அமைதியடையுமாறு கூறி தேரோட்டியிடம் தேர் ஓட்ட பணித்தார். மக்கள் கண்ணீரோடு ஒதுங்கி னார்கள். எப்படியும் கூடிய கூட்டம் தடுத்துவிடாதா என்றிருந்த தசரத சக்ரவர்த்தி தேர் புறப்படுவதை அறிந்து தேரை நிறுத்துங்கள் என்று கூச்ச லிட்டார்.

தேரோட்டி ஸ்ரீ இராமனைப் பார்த்தான். நீ தேர் ஓட்டுவதில் கவனம் செலுத்து என்றார் ஸ்ரீ இராமன். நீங்கள் சொல்வது போல் நான் தேரை ஓட்டினா லும் மீண்டும் திரும்பி வரும்போது மகாராஜா என்னை தண்டிப்பாரே நான் என்ன செய்வது என்றான். சில விநாடி அமைதியாக இருந்த ஸ்ரீ இராமர் அப்படி கேட்டால் மக்கள் கூச்சல் போட்டதால் தாங்கள் அழைத்தது எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிவிடு. இன்னும் இங்கு இருந்து கால தாமதம் செய்தால் அவர் மனம் மேலும் வருந்தக்கூடும். என்னுடைய மனமும் துன்பப்படும். அதனால் வேறு வழியில்லை விரைவாக தேரை செலுத்து என்றார்.

ஸ்ரீ இராமரே தேரோட்டியிடம் பொய் உரைக்க கற்றுகொடுத்திருக்கிறார். ஆனால் யாருக்கும் தீங்கு நேராத நன்மை தரும் பொய் என்பதால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொய் ஆகிற்று. மனிதர்களாகிய நாம் கூட அப்படித்தான் நாம் சொல்லும் பொய் ஒருவருக்கும் துன்பம் நேரமால் மாறாக நன்மையே தருமானால் அப்பொய்யால் எவ்வித தீங்கும் உண்டாகாது. இதை நம் புராணங்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றன. அதனால் பொய் சொல்லலாம் ஆனால் அவற்றால் தீமை உண்டாக கூடாது.


newstm.in

newstm.in

Next Story
Share it