தோஷங்கள் நீக்குமா நாகவழிபாடு?

தோஷங்கள் நீக்குமா நாகவழிபாடு?

தோஷங்கள் நீக்குமா நாகவழிபாடு?
X

நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

மாரிச்சி என்ற முனிவரின் மகனான காஷ்யப முனிவரின் பன்னிரண்டு மனைவிகளுக்கு பிறந்தவர்கள் நாகங்கள் என்கிறது புராணக் கதை ஒன்று. இறை அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு. ஆனாலும் ராகுவும், கேதுவுமே வழிபடப்படுகின்றன. நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும் , மற்ற காலக்கட்டங்களில் ஒருவரின் ஜாதகத்தைப் பார்க்கும் போதும் அவரது ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கிறதா என்பதை பார்ப்பது வழக்கம்.நாக தோஷம் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
நமது இந்து மத சாஸ்திரங்களில் காமதேனு , பசு மாடு ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமான இடம் வகிப்பது நாகங்கள் மட்டுமே .
பத்மா, ஐந்து தலைக்கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக்கொண்ட சேஷநாக் அல்லது ஆதிசேஷன் ஆகிய நாகங்கள் நம்முடைய தர்மத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது.

மேலும் சந்திரனின் பிறையை தலையில் வைத்துள்ள குளிகை என்னும் குளிகா, ஏழு தலை கொண்ட பச்சை நிற வாசுகி, தக்ஷ்யன், கார்கோடன், நீலநிற பாதி மனித உடல் கொண்ட அஸ்திகா, ஷங்கல்பலா, ஜாலமுகி, யமுனை நதியில் வாழுவதாக நம்பப்படும் காளிங்கன், கடக் மற்றும் வாசுகியின் சகோதரி மனசா ஆகிய நாகங்கள் புராணத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது .

தோஷங்கள் நீக்குமா நாகவழிபாடு?
ரிக்வேத காலத்தில் இருந்தே இருந்து வரும் நாக வழிபாடு குறித்து . யஜூர் வேதத்தில் கூட குறிப்புகள் உள்ளன. நம்முடைய பலத் திருக்கோயில்களில் நாகங்களை தேவதைகளாக பாதி நாக உடம்புகளுடன் உள்ள சிற்பங்களை இன்றைக்கும் பார்க்க முடிகிறது. இன்றைக்கும் காஷ்மீரில் நாக வழிபாட்டை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அந்தத் திருத்தலத்தில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன் உள்ளன. வெளிச் சுவர் மற்றும் நுழைவாயில் கோபுரத்திலும் நாக சிலை அமைந்துள்ளது

நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நாக தேவதைகள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்பு புற்றுடன் கூடிய நாகங்கள் அம்மனாக பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி போன்றவை முக்கியமானவை.

நாகங்களில் நாகமணியை தன்னுடைய தலையில் வைத்து உள்ள வாசுகியே நாகங்களின் தலைவி. வாசுகி பற்றிய குறிப்புகள் இந்து மதப் புராணங்களிலும் மட்டும் அல்ல, ஜைன, புத்த, திபெத்திய, ஜப்பானிய மற்றும் சீன புராணக் கதைகளிலும் காணப்படுகின்றன. வங்காளத்தில் வாசுகியின் சகோதரியாக கருதப்படும் மானசா என்ற நாகத்தை வழிபடுவது உண்டு.

நாரத முனிவரால் சபிக்கப்பட்ட கார்கோடன் என்ற நாகம் தனது சாபத்தை நளன் மூலம் விலக்கிக் கொண்டது ஐதீகம். நேபாளத்தில் இருக்கும் தண்டக் என்ற பகுதியில் ஏரி ஒன்றில் கார்கோடன் விலைஉயர்ந்த , வைர வைடூரிய அணிகலங்களுடன் தங்கி உள்ளதாக இன்றளவும் நம்பிக்கை உள்ளது.

சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அதுவழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பலவிதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவை.

புத்திர பாக்கியம் கிடைக்க நாகங்களில் ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், நோய் நிவாரணம் நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்கலாம். நமது பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப்பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கிட வாழ்க்கை நலம் பெறும்

Next Story
Share it