Logo

பக்தன் என்றால் யார் தெரியுமா? கிருஷ்ணரிடம் கேள்வி கேட்ட குசேலன் - நேற்றைய தொடர்ச்சி...

உன்னிடம் நான் செல்வத்தைக் கேட்டேனா, நான் உன் மீது கொண்ட பக்திக்கு மரியாதை அவ்வளவுதானா, என் இதயத்திலேயே அமர்ந்திருக்கிறாயே, பக்தன் என்றால் யார் தெரியுமா?
 | 

பக்தன் என்றால் யார் தெரியுமா? கிருஷ்ணரிடம் கேள்வி கேட்ட குசேலன் - நேற்றைய தொடர்ச்சி...

கிருஷ்ணர், குசேலரை உபசரித்து அவரிடமிருந்து அவலை வாங்கி உண்டதைப் பற்றி படித்தோம். கிருஷ்ணர் அவலை அள்ளி வாயில் போட்டதும் குசேலரின் வீட்டில் செல்வக் குவியல் உண்டானது. இந்தக் கதை அனைவருக்கும் தெரிந்த கதையே.கிருஷ்ணன் முதல் பிடி அவலை உண்டு இரண்டாவது பிடியை வாயில் இடும்போது ருக்மணி தடுத்துவிட்டாள்.

இறைபக்தியில் மூழ்கியிருப்பவனுக்கு அள்ளக்குறையாத செல்வத்தைக் கொடுத்தால் அவன் உலக இன்பத்தில் மூழ்கிவிடுவானாம். அத்தகைய நிலையில் குசேலனை ஆளாக்காமல் இருந்ததாக ருக்மணி பெருமைப்பட் டாள். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது.

குசேலனும் தன்னுடைய வறுமையைப் பற்றி கிருஷ்ணனிடம் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனும் நண்பனின் வறுமையைப் பற்றி அறிந்தும் அதைப் பற்றி கேட்கவில்லை. குசேலனுக்கு தெரியும் பிறருடைய பொருளுக்கு யார் ஆசைப்பட்டாலும், அவன் பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்துவிடுவான் என்று.

சிறுவயதில் கிருஷ்ணனையும், சுதாமாவையும் சாந்தீபனி முனிவரின் மனைவி, சமையலுக்கு விறகு எடுத்துவர அனுப்பினாள். போகும் போது இரண்டு பேரும் சாப்பிடுங்கள் என்று அவலில் வெல்லம் கலந்த பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள். விறகு வெட்டி முடித்ததும் கிருஷ்ணன் விறகை கட்டும்போது சுதாமா என்கிற குசேலர் பொட்டலத்திலிருந்த அவல் வெல்லத்தைச் சாப்பிட்டார். கிருஷ்ணனை மறந்து மொத்த அவலை யும் சாப்பிட்டுவிட்டார். கிருஷ்ணன் எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த அவலை குசேலர் சந்திக்கும் போது அவரிடமிருந்து பெற்றுக் கொண் டார்.

குசேலர் கிருஷ்ணனிடம் விடைபெற்று வீட்டுக்கு திரும்பினார். அவருடைய ஊருக்குள் காலடி எடுத்து வைத்ததும் குசேலன் உரு தெரியாமல் மாறிவிட்டார். அவருடைய கிழிந்த வஸ்திரங்கள் பட்டு வஸ்திரமானது. அவர் உடலில் நகைகள் பளபளத்தது. ஏதும் புரியாமல் தன்னைத் தானே பார்த்துக்கொண்ட குசேலர் புரியாமல் கிருஷ்ண நாமத்தை சொல்லி வீட்டுக்குள் நுழைந்தார்.

வீடுகள் அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்தது. தன்னுடைய வீட்டை தேடி அலைந்தார் குசேலர். அவரது மனைவி சுசீ,லை மாளிகை மாடத்திலிருந்து நின்று குசேலரை அழைத்தாள். எங்கே போகிறீர்கள். நம் வீடு இதுதான் என்று அழைத்தாள். வீட்டில் குழந்தைகள் தங்கத்தாலான தேரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பக்தன் என்றால் யார் தெரியுமா? கிருஷ்ணரிடம் கேள்வி கேட்ட குசேலன் - நேற்றைய தொடர்ச்சி...

அவர் வீட்டில் வேலை செய்யும்  வேலைக்காரியின் கழுத்துகள் கூட நகைகளால் நிரம்பியிருந்தது. பார்க்க பார்க்க அதிசயமாய் இருந்த குசேல னுக்கு எல்லாம் பரந்தாமனின் வேலை என்பது உணர முடிந்தது.வாய் விட்டு புலம்பினான்.

கிருஷ்ணா, மாயவனே மந்திரம் செய்பவனே.. என் பால்ய கால நண்பனே. என்னை அறிந்துகொள்ளவில்லையே... உன்னை நாடி வர செல்வம் தான் காரணமா, உன்னிடம் நான் செல்வத்தைக் கேட்டேனா, நான் உன் மீது கொண்ட பக்திக்கு மரியாதை அவ்வளவுதானா, என் இதயத்திலேயே அமர்ந்திருக்கிறாயே, பக்தன் என்றால் யார் தெரியுமா?

இறைவன்  மீது மிகுந்த பக்திகொண்டிருப்பவன் இறைவன் தரும் கஷ்டத்தையும் வரப்பிரசாதமாக எண்ணி பக்தியுடன் வாழ்ந்திருப்பவனே,,, அதையும் ஏற்று இன்பமாக வாழ்பவனே உண்மையான பக்தன். நான் உன்னிடம் கேட்பது என்னவென்பது உனக்கு தெரியாதா? அழியா உலகான வைகுண்டத்தில் எனக்கான ஒரு இடம், உன் பாதகமலத்தைத் தினமும் தரிசிக்க ஒரு இடம், இதுதான் நிரந்தர செல்வம். இந்த செல்வத்தைத் தேடிதான் நான் உன்னிடம் வருகிறேன். வேண்டுகிறேன். நிலையற்ற செல்வத்தின் மேல் எனக்கெந்த பற்றும் இல்லை. என்னை உன்னோடு சேர்த் துக் கொள் என்று கதறினார்.

அவரது கதறலின் குரல் கிருஷ்ணனை அடைந்தது. கிருஷ்ணர் சங்கு சக்ரத்துடன் அவரிடம் வந்து நின்றார். குசேலரின்விருப்பப்படியே  அவரை தன்னுள் ஐக்கியமாக்கிகொண்டார். கிருஷ்ணனை பற்றிக்கொண்டால் இப்பிறவியில் எல்லா இன்பமும் பிறப்பற்ற நிலையும் பெறுவது நிச்ச யமே…

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP