Logo

இறைவனின் பசியாற்றும் பிரசாதம் எது தெரியுமா?

பசிக்கொடுமையில் வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வயிறு நிறைய அன்னமிடுங்கள். பிரசாதங்களில் இறைவன் திருப்தியடைவது, இதர உயிரினங்களின் பசி அடங்கலில்தான்...
 | 

இறைவனின் பசியாற்றும் பிரசாதம் எது தெரியுமா?


கடவுளுக்கு விரதம் மேற்கொண்டு,  மிகச் சிரத்தையுடன்  நைவேத்யம் செய்யப்படும் பிரசாதம் அனைத்தையும்,  கடவுளே நேரில் வந்து  உண்பதில்லை. உலகில் உள்ள ஜீவராசிகளில் ஏதேனும் ஒன்று,  கடவுளின் அருளால்,  கடவுளுக்காக உண்கின்றன என்பதே உண்மை. இதை உணர்த்தும் கதை இது.

தோட்டம், துறவு, பண்ணை என்று, கண்ணப்பனுக்கு, கடவுள் பல  செல்வங்களை வாரி இறைத்திருந்தார். கண்ணப்பனும் அன்னதானம், பூஜை என்று  பக்தியுடன் வாழ்ந்துவந்தார். 

ஆனாலும், கனவில் வரும் இறைவன் ‛பசி அடங்கவில்லை’ என்று சொல்லிவிட்டு மறைவது வழக்கமாயிற்று. கண்ணப்பனின் தோட்டத்தில் வேலை செய்யும் கந்தசாமி, தினமும் கோயிலுக்குச் சென்று  பிரசாதங்களை பூசாரியிடம் கொடுத்துவிட்டு வருவான். 

அவன் போகும் வழியில், வறுமையில் இருக்கும் குழந்தைகள், பிரசாதத்தை ஏக்கமாக பார்ப்பார்கள். கடவுளை கண் முன் நிறுத்தி, மானசிகமாக மன்னிப்பு வேண்டி, யாரும் அறியாமல் குழ்ந்தைகளுக்கு கொடுத்துவிட்டு விடுவிடுவென்று  சென்று விடுவான். 

இறைவனின் பசியாற்றும் பிரசாதம் எது தெரியுமா?

நான் செய்வது பாவமாக இருந்தாலும், என்னால் குழந்தைகளின் பசிக்கொடுமையைப் பார்க்கமுடியவில்லை என்று  மனமுருக வேண்டுவான். 

ஒருநாள், செவ்வாழை தோட்டத்தில் முதல் தார் செழிப்பாக இருந்தது.  வழக்கம் போல் கண்ணப்பர், கந்தசாமியை அழைத்து இதைக் கொண்டு போய் பிரசாதமாக கொடுத்துவிடு என்றார். 

சரி என்று கோயிலுக்கு போனான் கந்தசாமி. இந்தப் பிரசாதங்கள் கடவுளுக்கு உரிய முறையில் போகின்றனவா என்று இன்று நாமே பார்த்துவிடுவோம் என்று நினைத்தப்படி, கண்ணப்பர் அவனை பின் தொடர்ந்தார்.  

அன்று பார்த்து  ஏகப்பட்ட குழந்தைகள்... பசிக்குது மாமா. என்றபடி அவனை சுற்றி சுற்றி வந்தனர். ஆளுக்கு ஒன்று  எடுத்தால்  பழங்களின் எண்ணிக்கை  குறைந்துவிடுமா என்று  நினைத்தப்படி வழக்கம் போல் இறைவனை  நினைத்து ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான். 

குழந்தைகளின் எண்ணிக்கை கூடியது. தார்களிலிருந்த பழங்களின் எண்ணிக்கை குறைந்தது. இறுதியில் மிச்சமானது  இரண்டு பழங்கள் மட்டுமே.. தூரத்திலிருந்து கவனித்த கண்ணப்பனுக்கு கோபம் கொப்பளித்தது. 

யார் அப்பன் வீட்டு பொருளை யார் எடுத்து கொடுப்பது. இருக்கட்டும் நாளை கையும் களவுமாக பிடிக்கிறேன் என்று மனதில் கறுவியபடி இறைவனிடம்  மானசிகமாக மன்னிப்பு வேண்டினார். 

வழக்கத் துக்கு மாறாக கனவில்  வந்த கடவுள்.. வயிராற சாப்பாடு கொடுத்தாய் கண் ணப்பா... பசியும்  அடங்கிற்று; மனமும் திருப்தியடைந்தது என்றார்.  இறைவனின் பசி என்ன என்பது  கண்ணப்பனுக்கு புரிந்தது.

பசிக்கொடுமையில் வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வயிறு நிறைய  அன்னமிடுங்கள். பிரசாதங்களில்  இறைவன் திருப்தியடைவது,  இதர உயிரினங்களின் பசி அடங்கலில்தான்... 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP