லிங்க உருவம் எதை உணர்த்துகிறது தெரியுமா?

லிங்கத்தின் வழிபாட்டை முறையாக கையாண் டால் மழை பெறலாம். காற்றை பெறலாம். கேட்ட அனைத்தையும் பெறலாம்.லிங்கத்தை மனதில் வைத்து அனுதினமும்

லிங்க உருவம் எதை உணர்த்துகிறது தெரியுமா?
X

லிங்கம்.. காணக்கூடிய உருவமாய் இருந்தாலும் காண முடியாத அருவமாக இருக்கிறது. உபநிடதம் என்ன கூறுகிறது தெரியுமா? நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்தி விட்டால் தேவைகள் அனைத்தும் வந்தடையும் என்று கூறுகிறது.

ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை வழிபாடு செய்யும் இந்துமதம் தான் உருவமுள்ள அருவமுற்ற லிங்க வழிபாட்டையும் உருவாக்கி யுள்ளது. இந்த லிங்கம் தான் முதலும் முடிவுமான முதல் தெய்வம் என்பதை வலியுறுத்துகிறது.லிங்கம் மங்களத்தின் அடையாளம். மனித வாழ் வில் அனைத்து நிகழ்வின் நிறைவிலும் மங்களம் பாடுவதும், ஆரத்தி எடுப்பதும் கூட அதனால் தான்.

மங்களம், சுபம், சிவம் அனைத்துமே சிவலிங்கத்தின் நிறைவுதான். அணுதத்துவத்தை ஆழமாக தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாக காட்சி தருகிறது லிங்கம்.லிங்கமானது சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்களை தனக்குள் கொண்டு ஒவ்வொரு கோணத்தி லும் இருந்து பார்க்கும் போதெல்லாம் ஒரு பொருள் தருவதாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மனித உடலில் பஞ்சபூதங்கள் இருப்பதைப் போன்று சுயம்பு லிங்கத்திலும் பஞ்ச பூதங்கள் சம அளவில் சீரான இயக்கத்தில் இருக்கிறது. மேலும் இவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து இருக்கிறது. இதை அறிவியல் ரீதியாக டாக்டர் விளாதிமீரும் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார். குறிப் பாக சுயம்பு லிங்கத்துக்கு இத்தகைய சக்தி அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒடுங்கியிருப்பது லிங்கத்தில் தான். உலகம் சிருஷ்டிக்கும் போது லிங்கத்தில் இருந்தே ஜீவராசிகள் வெளிப்படுகின்றது. பேரழிவு காலத்தில் லிங்கத்துக்குள்ளேயே ஜீவராசிகள் ஒடுங்குகிறது.லிங்கம் பரம்பொருள் என்று அழைக்க காரணம் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் ஒரே பரம்பொருள். ஆனால் வெவ்வேறு வடிவங்களாக காட்சியளிக்கிறார்கள். அதனால் பரம்பொருளை மனதில் இருத்தினால் சித்தம் சிவமாகும். ஒவ்வொரு மனிதனின் பிறப்பின் குறிக்கோள் சிவனை அடைவதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

லிங்க உருவம் எதை உணர்த்துகிறது தெரியுமா?

மனிதனுக்கு சிறந்த வாழ்க்கை தத்துவத்தை லிங்கம் உணர்த்துகிறது. பகவத் கீதையில் கூட எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு என்று கண்ணன் உபதேசிக்கிறார். லிங்கமும் இந்த தாத்பரியத்தையே உணர்த்துகிறது. லிங்கத்தின் மீது ஆபரணங்கள் அணிந்தாலும் நழுவி விடும். அதில் ஒட்டியிருக்காது. ஆடைகளும் அணிய இயலாது. அபிஷேகத் தண்ணீரும் தங்காது.

உடல் உறுப்புகள் இல்லாமல் அருவமாக காட்சியளிக்கும் லிங்கம் ஆசாபாசங்கள் இல்லாத பிறவி எடுக்காத மனநிலையை கொள்ள வேண்டும் என்பதையே காட்டுகிறது. ஆசைகளை எடுத்தெறிந்தால் எடுத்த பிறவிப்பயனை அடைந்துவிடலாம்.கடுமையான வெயிலாக இருந்தாலும் அடர்ந்த பனியாக இருந்தாலும் சுக துக்கங்களை ஏற்றிக்கொள்ளாமல் லிங்கமானது அமர்ந்திருப்பது போல் மனிதர்களையும் பாவிக்க சொல்கி றது சிவலிங்கம்.

அசையாமல் இருக்கும் லிங்கம் தான் அண்ட சராசரங்களையும் அசைத்து ஆட்டி வைக்கிறது. லிங்கத்தின் வழிபாட்டை முறையாக கையாண் டால் மழை பெறலாம். காற்றை பெறலாம். கேட்ட அனைத்தையும் பெறலாம்.லிங்கத்தை மனதில் வைத்து அனுதினமும் பூஜித்தால் பிற பொரு ளின் மீது இருக்கும் பற்று படிப்படியாக குறைந்துவிடும். பற்றை விட்டு விடு என்னை போல் எதையும் ஒட்டிக்கொள்ளாதே என்கிறது சிவலிங்கம்.

மீண்டும் பிறவா நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கும் நாம் முதலில் பற்றை விட முயற்சிக்க வேண்டும். பற்று கொண்ட உலகில் பற்றில்லாமல் வாழ முயற்சிப்போம். பரம்பொருள் உணர்த்தும் தத்துவத்தைப் புரிந்து பிறவாமை நிலையை அடைவோம்.


newstm.in

newstm.in

Next Story
Share it