Logo

திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா?

இன்னார்க்கு இன்னார் என்ற தெய்வத்தின் கணக்கு வெளிப்படும் முக்கிய தருணம் திருமண நிகழ்வு. இறைவனின் கணக்குப்படி இருமனம் இணை யும் திருமணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சம்பிரதயாங்களும் சடங்குகளும்
 | 

திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா?

இருமனம் இணையும் திருமண பந்தமானது இறைவன் விதித்தபடிதான் நடக்கும் என்று சொல்வார்கள். மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய மான  நிகழ்வு திருமணம்.  திரு என்னும் சொல் மிக உயர்ந்த நிலை என்னும் பொருளை உள்ளடக்கியது.

இன்னார்க்கு இன்னார் என்ற தெய்வத்தின் கணக்கு வெளிப்படும் முக்கிய தருணம் திருமண நிகழ்வு. இறைவனின் கணக்குப்படி இருமனம் இணை யும் திருமணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சம்பிரதயாங்களும் சடங்குகளும் ஒழுங்கு முறையோடு கடைப்பிடித்து வருகி றது இந்துமதம்.

திருமணத்தின் போது செய்கின்ற ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. திருமணத்துக்கு முன்பு அரசாணிக்கால் நடுவது முதல் இந்த சடங்கு ஆரம்பமாகிறது. திருமண நேரத்தில் கும்பம் (கங்கை போன்று தூய்மையான நீர்) ஹோமம் வளர்த்தல் (அக்னி சாட்சி) நவகிரகங்கள் வழிபாடு, தாரை வார்த்தல்,திருமாங்கல்யம், அட்சதை, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தாலி கட்டுதல், மெட்டி அணிவித்தல் இப்படியான சடங்குகள் முறையாக மந்திரங்கள் முழங்க  சுற்றமும் நட்பும் சூழ மங்களகரமாக நடைபெறும்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். அதன் படியே செய்கிறோம் அதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? மண மக்கள் அக்னியை வலம் வரும்போது அவர்களது வலது பக்கத்தில் அம்மியை வைத்திருப்பார்கள். அதாவது இரும்பு கூட பாரம் தாங்காமல் வளைந்து விடும். ஆனால் கல் வளைந்துகொடுக்காது, மாறாக உடைந்து போகும் என்பதுதான்.

பெண்கள் கற்பில்  கல்லைப்போன்று உறுதியாக இருக்க வேண்டும். அதை உணத்தும் வகையில் மணமகன் மணமகளின் காலை பற்றி அம்மி மீது வைப்பதும், அதன் பிறகு அருந்ததியை வணங்க சொல்வதும் நடைபெறும். அருந்ததி என்றால் கணவனின் சொல்லுக்கு குறுக்கே நிற்காதவள் என்று பொருள்.

உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும்.ஆனால் கல்லை வளைக்க முடியாது. அதுபோன்று கற்பு நெறி தவறாமல் வாழும் நான் ஒரு போதும் அந்நிலையிலிருந்து பிறழ மாட்டேன். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கும் போது கல் பிளவுப்படுவது போல நானும் உயிர் துறப்பேன் என்பதை உணர்த்தவே அம்மி மிதிக்கும் சடங்கு திருமண சடங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மணமகன் மணமகளின் காலை பிடித்து அம்மியில் பதிக்கும் போது இந்தக் கல்லை போன்று உறுதியாக நிற்க வேண்டும் வாழ்வில் எனக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை பொறுத்து எனக்கு துணையாக நிற்க வேண்டும் என்று கூறுகிறான்.

அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வு விளக்கும் தாத்பரியம் என்னவென்றால்  வசிஷ்ட மகரிஷியின் மனைவியானவள் அருந்ததி. கற்பில் சிறந்தவ ளான அருந்ததி தெய்வத்தன்மையால்  நட்சத்திரமாகிவிட்டாள். வசிஷ்டரும், அருந்ததியும் இணைந்து நட்சத்திரங்களாக இருப்பது போலவே வாழ்வில் இருவரும் இணைப்பிரியாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே மணமகன் மணமகளுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் கற்பில் நீயும் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று உணர்த்துவதாக அருந்ததி காட்டல் நிகழ்வு சடங்கு நடத்தப்படுகிறது. 

திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் ஒவ்வொரு தத்துவத்தையும் உணர்த்துவதாகவே அமைக்கப்பட்டது.  இத்தகைய சடங்குக ளுக்கு உரிய நேரம் ஒதுக்கி அதைக் கடைப்பிடிக்கவும் செய்துவந்தார்கள். ஆனால் தற்போது மாறிவரும் நாகரிக சூழலில் திருமண நிகழ்வில் இத்தகைய சடங்குகள் குறைந்துவருகிறது. 

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்களில் மகிழ்ச்சியும் நிலைத்திருந்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம். 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP