Logo

இராமாயணத்தில் உள்ள ஆச்சரியங்கள் தெரியுமா உங்களூக்கு ? 

 | 

ராமாயணத்தின் ஒவ்வொறு பாத்திரத்திற்குமே ஒரு தனி வரலாறு இருக்கிறது, அதில் பலருக்கும் தெரியாத சில ஆச்சர்யமான தகவல்களை பார்க்கலாம். இராவணன் மிகச்சிறந்த வீணை இசை கலைஞன், ராவணனின் கொடியில் வீணை இருக்கும், மேலும் பல விசித்திரமான போர் ஆயுதங்களை தானே கண்டுபிடித்து போர்க்களத்தில் உபயோகித்திருக்கிறான்.

இலக்குவன் வனவாசம் இருந்த 14 வருடங்கள் ராமனையும் சீதையையும் பாதுகாக்க தூங்காமல் இருந்தான் என்று புராணம் சொல்லுகிறது, அதாவது உடலை மட்டும் ஓய்வு படுத்தி விழிப்பு நிலையில் இருந்திருக்கிறார் இது ஒரு வகை யோக நித்திரை என்றுசொல்லபடுகிறது.

நித்ரா தேவி , லஷ்மனிடம் வந்த போது லட்சுமணன் தன்னைக்கு 14 வருடங்கள் தூங்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று கேட்கிறார், அனால் நித்ரா தேவி அப்படியென்றால் அந்த தூக்கத்தை வேறு யாருக்காவது தர வேண்டுமே, யாருக்கு தருவது என்று கேட்டபோது தன் மனையவியான ஊர்மிளைக்கு தர வேண்டும் என்று கேட்டான், அதனாலேயே ஊர்மிளை 14 வருடங்கள் தொடர்ந்து தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ராமன் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசம் இருந்ததாக சொல்லப்படும் காடுகள் தற்போது மத்திய இந்தியாவின் சட்டிஸ்கர், ஒரிசா மகாராஷ்டிரா என்ற மாநிலங்களை உள்ளடக்கிய 36, 500 சதுர கிலோமீட்டர் கொண்ட வனப்பகுதியாக கருதப்படுகிறது, அந்த காலத்தில் இது ராட்சஷர்கள் நடமாடிய இடமாக கருதப்படுகிறது.

ராமன் சுயம்வரத்தில் வளைத்த வில் சிவ தனுசாக கருதப்படுகிறது. அதாவது சிவனிடம் இருந்து வந்தது. அந்த வில் கற்பனை செய்ய முடியாத வலிமை கொண்டது, சிறுவயதில் சீதை அதை எளிதாக தூக்கி விட்டாள் அந்தநாள் ஜனகர் அதற்க்கு சமமான வலிமை கொண்ட ஒருவரை மணமகனாக தேட வேண்டும் என்று உறுதி கொண்டார், அந்த வில்லை ராமன் வளைத்து நாண் ஏற்றிய போது அது நடுவில் உடைந்தது, இது போன்று நூற்றுக்கணக்கான ஆச்சர்யமான தகவல்களில் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP