Logo

தர்மம் தலைகாக்கும் கர்வம் தன் நிலை இழக்க வைக்கும்...

எம்பெருமான் பூஜையில் இருக்கிறாரா? அகிலத்தில் இருக்கும் அண்ட சராசரங்களையும் படைத்த அவருக் காக எல்லோரும் காத்திருக்க அவர் யாருக்கு பூஜை செய்கிறார் என்று கருடனுக்கு சந்தேகம் இருந்தது.
 | 

தர்மம் தலைகாக்கும் கர்வம் தன் நிலை இழக்க வைக்கும்...

தர்மம் தலைகாக்கும் கர்வம் தன் நிலை இழக்க வைக்கும் மனிதர்களிடத்தில் நானே பெரியவன். என்னால் தான் இவன் வாழ்கிறான் என்று சொல் லிக் கொள்ளலாம். ஆனால் இறைவனிடத்தில் அத்தகைய கர்வம் கொள்ளலாமா. கருடனுக்கு அந்த கர்வம் வந்தது. 

மகாவிஷ்ணுவாக இருந்தாலும் ஸ்ரீ இராமனாக மானிட அவதாரம் எடுத்திருந்த காலம். இராவணன் மகன் இந்திரஜித் உடன் போர் புரியும் போது அவனது நாகாஸ்திரத்தை ஏவினான். இதனால் கட்டுண்டு விழுந்த இராமனையும், லஷ்மணனையும் கண்டு பயந்த நாரதர் கருடனிடம் சென்று இராமனை மீட்க சொன்னார். கருடனும் இராமன் அருகில் வந்து மயக்கத்திலிருந்து தெளிய வைத்தார்.

பரம்பொருள் எல்லாம் அவரே என்றீர்கள். இறுதியில் நான் தானே அவரை காப்பாற்றினேன் என்றார் கருடன். கருடனின் கர்வத்துக்கு தக்க பதி லடி கொடுக்க நினைத்தார் நாரதர். நீ சொல்வது சரிதான். ஆனால் இதற்கான விளக்கத்தைப் பிரம்மனால் தான் கொடுக்க முடியும் என்றார்.கருடன் பிரம்மனிடம் சென்றார்.

பிரம்மனுக்கு கருடனின் கர்வம் புரிந்துவிட்டது. அதை அடக்க சரியான ஆள் சிவபெருமான் தான் என்று நினைத்தவர் சிவ சிவ நாமத்தை சொல் லும் என்னிடம் போய் கேட்கலாமா? இராம பக்தரான சிவபெருமானிடம் கேளேன். உனக்கு சரியான விடை கிடைக்குமென்றார். கருடனும் சரி என்று கயிலாயம் தேடி சென்றார்.

கயிலாயத்தில் சிவபெருமானைப் பார்க்க தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் காத்திருந்தார்கள். கயிலாயத்தில் ஒரு நொடி என்றாலே பல யுகங்கள் காத்திருக்க வேண்டும். கருடனால் காத்திருக்கவும் முடியவில்லை. அவர் தான் பெரியவர் என்று சிவனின் வாயால் கேட்கவே காத்திருந் தார். 

நந்தியை அணுகிய கருடன் ஒரு பெரும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவே எம் பெருமானைச் சந்திக்க வந்திருக்கிறேன். ஏற்கனவே முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு அவரைக் காண வந்திருக்கிறார்கள்.அவரை சீக்கிரம் வரசொல்லேன் என்றார்.எம்பெருமான் பூஜையில் இருக்கிறார். வந்துவிடுவார் என்றது நந்தி. என்னது எம்பெருமான் பூஜையில் இருக்கிறாரா?  அகிலத்தில் இருக்கும் அண்ட சராசரங்களையும் படைத்த அவருக் காக எல்லோரும் காத்திருக்க அவர் யாருக்கு பூஜை செய்கிறார் என்று கருடனுக்கு சந்தேகம் இருந்தது.

தர்மம் தலைகாக்கும் கர்வம் தன் நிலை இழக்க வைக்கும்...

ஆனால் அடுத்த நோடியே சிவபெருமான் தரிசனம் தந்ததோடு கருடனை நோக்கி ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசித்துக்கொண்டிருந்த என்னை அவசர மாக அழைத்தாயே கருடா எதற்காக? என்றார். கருடனுக்கு பேச்சே எழவில்லை. என்ன சொல்கிறீர்கள் சுவாமி? அகிலத்தில் இருக்கும் ஜீவராசி களை காக்கும் நீங்களே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வழிபடுகிறீர்கள் எனும் போது நான் அவரது மகத்துவத்தை அறியாமல் கர்வம் கொண்டு விட் டேனே. அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் மாறாத பக்தியைக் கொண்டிருக்கவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

எம்பெருமான் பறவைக்கு பறவையின் மூலமே ஞானத்தைப் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். கயிலையின் வடக்கே உள்ள நீலாச்சலத்தில் காகபுசுண்டி என்பவர் ஹரியின் பெருமைகளைக் கூறுபவர். அப்படியான சாதுக்களிடம் சத்சங்கம் கேள். இவரிடம் சென்றால் இராமபிரானின் அரு மையை விளக்கி சொல்லுவார் என்றார். கருடனும் எம்பெருமானை சேவித்து காகபுசுண்டியைச் சந்திக்க சென்றார். இராமரின் பெருமையை அவர் விளக்க இவரும் ஸ்ரீ இராமனின் பெருமைகளைப் புரிந்துகொண்டேன் என்றார் அகமகிழ்ந்து.

சற்றுப்பொறு என்ற காகபுசுண்டி இராமனை விட மகத்துவம் மிக்க ஒன்று இருக்கிறது அதையும் தெரிந்துகொள் என்றார். அதைவிட பெரியதாக என்ன இருக்கிறது என்றார் கருடன் வேகமாக.. இராம நாமம்… இராமனைவிட மகத்துவம் மிக்கது என்றார்.

அதனால் நீங்களும் எப்போதும் சொல்லுங்கள் ராமா! ராமா!
 
newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP