சாய்பாபாவின் மடியில் உயிரை விட்ட பக்தர்!!
விஜயானந்த சுவாமிகள் என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1911 ஆம் ஆண்டு அவர் கயிலாய யாத்திரை சென்றார். கயிலாயம் போகும் வழியில் நாகபுரியில் சாய்பாபாவின் புகழ் பற்றி கேள்விப்பட்டார். எனவே அவர் தமது புனித யாத்திரையை சீரடி நோக்கி திருப்பினார்.
சாய்பாபாவைத் தரிசிக்கச் சென்றார். " பயன்படாத இந்தப் பரதேசியை எதற்கு உள்ளே அனுமதித்தீர்கள்? துரத்துங்கள்? என்று உத்தரவிட்டார் சாய்பாபா. விஜயானந்த சுவாமிக்கு சப்தநாடியும் அடங்கி விட்டது. அருகில் இருந்த சீரடி மக்கள் அவரை அமைதிப்படுத்தி "இன்னொரு முறை வாருங்கள் " என்று அனுப்பி வைத்தனர்.
அன்று இரவு விஜயானந்த சுவாமிக்குத் தூக்கம் வரவில்லை. 'தம்மைப் பற்றி சாய்பாபாவிற்கு எப்படித் தெரியும்? பயன்படாதவன் என்று எப்படிக் கண்டுபிடித்தார்? ஏதோ, இறைவன் நம்பிக்கையில் கால் போன போக்கில் போகும் என்னைப் பற்றி எனக்குத்தானே தெரியும்' என்று கோழி கூவும் வரை சிந்தனையில் மூழ்கினார். சாய்பாபாவிடம் ஆசி பெறாது நாம் சீரடியை விட்டுச் செல்லக்கூடாது என்று அவர் முடிவு செய்தார். அவர் சாய்பாபாவையே சுற்றிச் சுற்றி வந்தார்.
சாய்பாபாவின் இதயத்தில் இரக்கம் சுரந்துவிட்டது. கண்களில் கருணை ஊற்றெடெத்து. " நீ எங்கும் போக வேண்டாம். இதுதான் உம் கயிலாயம். இங்கேயே தங்கிவிடு"என்றார் சாய்பாபா. விஜயானந்த சுவாமி மகிழ்ச்சியில் மிதந்தார். சாய்பாபாவின் முன் விழுந்து வணங்கினார். ஒ௫ நாள் விஜயானந்த சுவாமிகளின் அன்னை மரணப்படுக்கையில் மன்றாடுகிறார் என்று ஒ௫ துயரச் செய்தி வந்தது. சென்னைக்குப் புறப்படார் விஜயானந்த சுவாமி. சாய்பாபாவிடம் ஒ௫வார்த்தை சொல்ல வேண்டும்போல தோன்றியது சோகத்தில் நனைந்து வந்த சுவாமியை சாய்பாபா பார்த்தார்.
"பற்றற்றவார்தான் காவி உடை அணிய வேண்டும். அந்தக் கஷாயத்தைத் தரித்தவன் பற்று பாசம் அத்தனைக்கும் விடை கொடுத்து விட வேண்டும். எங்கும் போக வேண்டாம் இங்கேயே இ௫" என்று நெற்றியில் அடித்தாற்போல் சாய்பாபா சொன்னார். "பக்தர்களுக்காக நீ இரண்டு வாரங்கள் பாகவத பாராயணம் செய் போ" என்று சாய்பாபா கட்டளையிட்டார்.
சென்னை செல்லும் திட்டத்தையே விஜயானந்த சுவாமி கைவிட்டார். பாகவத பாராயணம் செய்தார். அவருடைய அன்னைக்கு மோட்சத்தின் கதவுகள் திறந்தன. எந்தத் தொல்லையும் இல்லாது அந்த அன்னையின் உயிர் பிரிந்ததாகத் தகவல் வந்தது. சொர்க்கத்தின் வாயில் திறந்ததற்கு அது தான் அடையாளமாகும். அடுத்த சில தினங்களிலேயே விஜயானந்த சுவாமி நோய்வாய்ப்பட்டார். அவரை காண சாய்பாபாவே வந்தார்.
விஜயானந்த சுவாமியின் தலையைத் தூக்கி சாய்பாபா தமது மடியில் வைத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமியின் உயிர் பிரிந்தது. 'பயனற்ற பரதேசி' என்று எந்த விஜயானந்த சுவாமியை சாய்பாபா அருகில் வராதே எட்டி நில் என்று கட்டளையிட்டாரோ அதே சுவாமியின் உயிர் சாய்பாபாவின் மடியில் தான் பிரிந்தது.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
newstm.in