கடன் தொல்லை !! திருமண தடை என வருத்தமா ? கவலை வேண்டாம் !! இதை மட்டும் பண்ணுங்க....

கடன் தொல்லை !! திருமண தடை என வருத்தமா ? கவலை வேண்டாம் !! இதை மட்டும் பண்ணுங்க....

கடன் தொல்லை !! திருமண தடை என வருத்தமா ? கவலை வேண்டாம் !! இதை மட்டும் பண்ணுங்க....
X

கடன் தொல்லை மற்றும் திருமணமாக தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும், பிள்ளைகளின் தோஷத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் தலமாக விளங்குவது இந்த வயலூர் முருகன். பல முனிவர்களுக்கும் அடியார்களுக்கும் அருள்புரிந்த தலமாகிய வயலூர் முருகன் தளத்திற்கு ஒருமுறை சென்று வந்தாலே போதும்.

அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும். வயலூர் முருகனை வழிபட்டு இறவாபுகழைப் பெற்றார் அருணகிரிநாதன் என்ற இந்த ஒரு கூற்றே போதும் இந்த வயலூர் முருகனின் சிறப்பை எடுத்துரைக்க. பழனி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைத்த வேண்டுதலை வயலூர் முருகன் கோயில் நேர்த்திகடன் செய்யலாம்.

ஆனால் வயலூர் முருகன் கோயிலில் வைத்த வேண்டுதலை மற்ற எந்த இடத்திலும் நேர்த்திக் கடன் செய்ய முடியாது அவ்வளவு பிரசித்தி பெற்றது இந்த வயலூர் முருகன் கோவில். இந்த வயலூர் முருகனைக் காண ஒரு கண் பத்தாது,வரம் தருவான் வயலூரான் என்பது அந்த ஊர் மக்கள் அவரின் புகழை எடுத்துரைக்கின்றனர்.

கடன் தொல்லையும் பிள்ளைகளுக்கான வேண்டுதலும் திருமண பரிகாரங்கள் எதுவாயினும் வந்தவர்களின் மனக்குறையை தீர்த்து வைக்கிறார் இந்த வடிவேலன். இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன். இந்த கோயிலின் வழக்கமாக இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.இவ்வாறு கோவிலில் தத்து கொடுத்த குழந்தைகள் தோஷம் நீங்கி வாழ்வில் பல வெற்றிகளை பெற்று வாழ்கின்றனர் என்ற அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா,சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகின்றன.

Newstm.in

Next Story
Share it