Logo

பொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று?

இந்துமதம் வலியுறுத்தும் அநேக விஷயங்களில் ஒன்று பேராசை கொள்வது ஆபத்தானது என்பது. இன்னும் வேண்டும் வேண்டும் என்று பொருளீட்டுவதும், பிறருக்கு உதவாமல் அதைத் தானே வைத்துக்கொள்ள விரும்புவதும், சுயநலமாக இருப்பதும் நல்வழிக்கான பாதையல்ல.
 | 

பொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று?

இந்துமதம் வலியுறுத்தும் அநேக விஷயங்களில் ஒன்று பேராசை கொள்வது ஆபத்தானது என்பது. உலகில் வாழ்வதற்கு அடிப்படை தேவைகள் தவிர உலக பற்றின் மீது இன்பம் கொண்டு இன்னும் வேண்டும் வேண்டும் என்று பொருளீட்டுவதும், பிறருக்கு உதவாமல் அதைத் தானே வைத்துக்கொள்ள விரும்புவதும், சுயநலமாக இருப்பதும் நல்வழிக்கான பாதையல்ல.

கிராமம் ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் இருந்தது. அங்கிருந்த மக்கள் விவசாயம், கால்நடைகளை வைத்து செல்வச் செழிப்பாக இருந்தார்கள். மக்களின் வாழ்வாதாரமும் தடையின்றி சீராக இயங்கியது. வானம் பார்த்த பூமியாக இருந்த கிராமத்துக்கு வந்தது சோதனை. பயிர்கள் நீரின்றி வாடின. மக்கள் குடிக்கவே தண்ணீரின்றி சிரமத்துக்கு உள்ளானார்கள். நாளடைவில் தண்ணீர் பஞ்சம் அதிகமாகியது. இனி எங்கும் தண்ணீரே இல்லை என்னும் நிலை உருவானது. மக்கள் தாகத்துக்கு தவித்தார்கள். பசியால் வாடினார்கள்.

தங்களுக்கே வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் போது இவர்களுடன் இருந்த கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போனது. அதனால் அவற்றை அதன் விருப்பப்படி விட்டுவிட்டு இவர்கள் எல்லோரும் வேறு கிராமத்தை நோக்கி முக்கிய பொருள்களை எடுத்துக்கொண்டு பயணித்தார்கள்.

அந்தக் கிராமத்தில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனும் அவனிடமிருந்த பண மூட்டையை எடுத்துவைத்து கிளம்புவதற்கு ஆயத்தமானன். இருக்கும் கால்நடைகளை யாரிடமாவது விற்கலாம் என்றால் என்ன செய்வது. எல்லா மக்களும் கிளம்பிவிட்டார்களே என்றுயோசித்தான். அப்போது வாயிலில் சத்தம் கேட்கவே யார் என்று திரும்பி பார்த்தான். அங்கு அன்பரசு நின்றிருந்தான்.
பெயருக்கேற்றப்படி அவன் அன்பே உருவானவன். அவனிடம் கால்நடைகள் எதுவும் கிடையாது. அதனால் கையில் இருந்த பணமூட்டையைக் காட்டியபடி நானும் ஊரை விட்டு வெளியேற விரும்புகிறேன். மலையின் பள்ளத்தாக்கை கடக்க எனக்கு குதிரை வண்டி வேண்டும். உங்களிடம் இருக்கிறதே அதை எனக்கு விற்றால் நன்றாக இருக்கும். நான் என்னிடம் இருக்கும் பண மூட்டையை உங்களுக்கு தருகிறேன் என்றான். 

பணக்காரனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆஹா லஷ்மி தேடி வருகிறதே என்று அதனால் அன்பரசனிடம் அதிக விலையை சொல்லவே வேறு வழியில்லாமல் அவனும் தனக்கு கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு மீதியை இவனிடமே கொடுத்துவிட்டு குதிரை வண்டியை ஓட்டிப்போனான். செல்வந்தன் அத்தனை செல்வத்தையும் அள்ளி காரில் போட்டுக்கொள்ள இவன் குதிரைக்கு வேண்டிய தானியங்கள், கொள்ளு, வழியில் சாப்பிட இருக்கும் உணவு பொருள். தேக்கி வைத்திருந்த நீர் போன்றவற்றை எடுத்துகொண்டு கிளம்பினான். 

அன்பரசன் பயணத்தின் போது வழியில் ஆங்காங்கே இளைப்பாறி குதிரைக்கும் உணவு கொடுத்து இவனும் உண்டு உறங்கி பயணித்தான். இடையில் பணக் காரனுடைய கார் நடுவில் நின்றுவிட்டது. கையில் இருக்கும் பண மூட்டையால் அவனால் தண்ணீரும் வாங்கமுடியவில்லை. உணவும் வாங்க முடிய வில்லை. தவித்த அவனுக்கு என்ன செய்வதென்று புரியாமல் அழவும் திராணியின்றி உட்கார்ந்திருந்தான். அப்போது அன்பரசு வருவதைப் பார்த்தான்.  ஒடிச்சென்று அவன் கால்களில் விழுந்து பணத்துக்கு மன்றாடியது தவறுதான். என்னையும் காப்பாற்றேன் என்று அவனிடமிருந்த அத்தனை செல்வத்தையும் அன்பரசுவிடம் கொடுத்தான். அன்பரசு எதையும் பெறாமல் பணக்காரனுக்கு குடிக்க நீரும், உணவும் கொடுத்தான்.  

பிறகு இறைவன் காரண காரியங்களின்றி நம்மை படைப்பதில்லை. பொருளற்ற இந்த வாழ்வின் மீது பற்றுக் கொண்டு பொருளின் மீது ஆசைப்பட்டு வாழ்வதால் நாம் எடுத்த பிறவிக்கு பயன் இராது என்றபடி பணக்காரனையும் உடன் அழைத்துச்சென்று வேறு கிராமத்துக்கு போய் சேர்ந்தான். இருவரும் விவசாயம் பார்த்து நல்ல நிலைமைக்கு வந்ததோடு அண்டி வந்தவர்களுக்கும் உதவி செய்தார்கள். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP