Logo

மனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக அவதரித்த நாள்

மனித சமுதாயம் ஒவ்வொரு நாளும் பாவத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ பாவங்களை செய்து மனிதத்தை மறந்து கொண்டிருக்கிறோம்.
 | 

மனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக அவதரித்த நாள்

மகத்துவமான மாதம் மார்கழி என்பது இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறித்துவர்களுக்கும்தான்.  மாதம் முழுவதும் கொண்டாட்டம்.... இறைவனை வரவேற்கும் வகையில் கீதங்கள்....  இறை வழிபாடுகள்... இல்லத்தையும் ஆலயத்தையும் அலங்கரிக்க ஒளிமிக்க நட்சத்திரங்கள்.... அலங்கார  மரங்கள்.. பரிசுகளைக் கொடுக்க படையெடுக்கும் தாத்தாக்கள் .. வாழ்த்துகள்.... இனிப்புகள்..என திகட்ட திகட்ட கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

மனித சமுதாயம் ஒவ்வொரு நாளும் பாவத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ பாவங்களை செய்து மனிதத்தை மறந்து கொண்டிருக்கிறோம். சுயநலவாதிகளாக மனிதர்கள் உருவெடுக்கிறார்கள். மனித குலம் பலவகையில் தொல்லைகளையும் கொடுமை களையும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மீளவே முடியாத கொடுமையின் பிடியில் இருந்த மனித குலத்தை மீட்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, பாவ மன்னிப்புகளை வழங்க பாலகுமாரனாம் தேவகுமாரன் அவதரித்தார்.

என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்கு துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன்.(யோவான் 16:33)

ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரேல் பகுதியில் நாசரேத் என்னும் ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் மேரி. அவள் வளர்ந்ததும் தச்சுத்தொழில் செய்து வந்த யோசேப்புக்கு மணமுடித்து வைத்தனர்.  மேரியின் இளம்பருவத்தில் காபிரேயல் என்னும் தேவதூதன் ஒருவன் முன் வந்து மரியாளே   உனக்கு பிறக்கும் குமாரனுக்கு இயேசு என்று பெயரிடு என்று சொல்லி மறைந்தான். நடப்பதை உணர்வதற்குள் தேவதூதன் மறைந்துவிட்டார். மேரி தன் இனத்தில் மூத்த வயதுள்ள எலிசபெத் குடும்பத்தினருக்கு இச்செய்தியைக் கூறினாள்.பிறக்க போகும் ராஜாவின் தாயாக கடவுள் உன்னை தெரிந்து கொண்டார் என்று வாழ்த்தினார்கள். 

மேரி கருத்தரித்தாள். யோசேப்புவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. மேரியின் கருவை நினைத்து மேரியை விலக்க யோசேப்பு முடிவு செய்த தருணத்தில் யோசேப்புவின் கனவில் இறைவனின் தூதுவன் வந்து, இறைவனின் குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பவே மேரி இறைவனால் அனுப்பப்பட்டிருக்கிறாள் .அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியினாளே என்று கூறினான். இதைக் கேட்டு யோசேப்பு மகிழ்ந்தான். கர்த்தரின் கட்டளைப்படி குமாரனின் வருகையை எதிர்நோக்கினான். நாட்கள் சென்றது ரோம அரசன் கட்டளைப்படி எல்லோரும் தத்தமது ஊருக்குச் சென்றார்கள். யோசேப்பு தாவிது ராஜாவின் வம்ச வழியில் வந்தவராதலால் அவர் பிறந்த ஊரான பெத்லகேமுக்கு மேரியை கழுதையில் அமர வைத்து அழைத்துச் சென்றார். அவர்கள் சென்ற நேரம் பெத்லகேமில் தங்குவதற்கு எங்கு தேடியும் இடம் கிடைக்கவில்லை. அன்று இரவு அருகில் இருந்த மாட்டுத் தொழுவத்தில் தங்கினர். குமாரன் பிறப்பதை அறிவிக்க செய்யும் விதமாக வானில் தோன்றியது நட்சத்திரம் ஒன்று. முழு பெளர்ணமி அன்று மக்களின் ராஜா... உலகை  ரட்சிக்கும் இறைவனின் குமாரன்  நமையெல்லாம் காக்க ரட்சித்தார். 

மனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக அவதரித்த நாள்

கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தில் கிறிஸ்டிஸ் மேஸி சொல்லிலிருந்து உருவானது. கிறிஸ்துவ கூட்டம் என்பது இதன் பொருள். கிறிஸ்துமஸின் சுருக்கமான எக்ஸ் என்பது கிரேக்க மொழியில் இயேசுவைக் குறிப்பதாகும். இயேசுவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் ஆயிற்று. பெளர்ணமியுடன் இணைந்த கிறிஸ்துமஸ் இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு அன்னைமரியாள் மார்ச் மாதம் 25 ஆம் தேதி கருத்தரித்து டிசம்பர் 25 ஆம் தேதியன்று இயேசு பிறந்தார் என்று அன்றைய தினத்தை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகின்றனர். இயேசு பிறந்த ஆண்டு தெரியவில்லை. அவர் கிமு7 க்கும் கிமு 2 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் என்றூ கருதுகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் தாத்தா வருகை, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், கிறிஸ்துமஸ் கேக் என்று கொண்டாடுகிறார்கள். 

கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துவ ஆலயங்களில் தேவ கீர்த்தனைகள் பாடுவார்கள். எல்லா தேவாலயங்களிலும் அழகான அலங்கரிப்பும், சிறப்பான வழிபாடுகளும் நடைபெறும். கிறித்துவ ஆலயங்களில் பேராலயம் என்று பசிலிக்காவை அழைப்பார்கள். இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உண்டு. மும்பை பாந்திராவில் மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களூரு ஆரோக்கியமதா ஆலயம் போன்றவை பசிலிக்காக்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

இயேசு நம்மை காக்கவே நம்முடன் இருக்கிறார். நம் இருளைப் போக்கி ஒளியுண்டாக்கவே உலகில் இரட்சித்திருக்கிறார். செய்த பாவங்களை உணர்ந்து பாவமன்னிப்பு கோரியவர்களை அப்பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். எப்போதும் உன்னை கைவிடமாட்டேன். என்னை நினைத்து விசுவாசமாக இருப்பவர்களுக்கு என்றும் துணையாக இருப்பேன் என்று ஆறுதல் அளிக்கிறார்.மனித வாழ்க்கையில் மனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக  அவதரித்து அளப்பறியா அன்பை காட்டி, நேசத்துடன் நம்மை பாவிகளிடமிருந்து மீட்டிருக்கிறார். பரமத்தை ஆளும் பரமபிதாவே.. அறிந்தும் அறியாமலும் நாங்கள் செய்த தவறுகளை மன்னியும் என்று மன்றாடி கேட்கும் மக்களுக்கு நான் உடன் இருக்கிறேன் என்று நமது பாவங்களை அவர் கழுவில் ஏற்றி சுமக்கிறார். தேவனின் ஆசிர்வாதம் பெற்று பாவம் நீக்கி வாழ்வோம். 
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP