Logo

சண்டேசுவர நாயனார்-63 நாயன்மார்கள்

சிவனின் நினைப்பில் பூஜை செய்பவர்கள் அச்சமயத்தில் இடையூறு ஏற்படுத்தினாலும் கூட அதை மனதில் ஏற்றாமல் சர்வம் சிவமயம் என்று வாழ்வார்கள். சிவனுக்கு செய்யும் தொண்டில் இடையூறு ஏற்படுத்தினால் கடுங்கோபம் கொண்டு அவர்களை தண்டித்து பிறகு பூஜையில் ஈடுபடுவார்கள்.
 | 

சண்டேசுவர நாயனார்-63 நாயன்மார்கள்

சிவனின் மீது பற்றுக்கொண்ட சிவனடியார்களும், சிவனுக்குத் தொண்டு செய்பவர்களும் எந்நேரமும் சிவனைப் பற்றிய எண்ணத்திலேயே இருப் பார்கள். சிவனின்றி ஓர் அணுவும் இயங்காது என்னும் கருத்தை வலுவாகப் பற்றியிருப்பார்கள். சிவனின் நினைப்பில் பூஜை செய்பவர்கள் அச்சம யத்தில் இடையூறு ஏற்படுத்தினாலும் கூட அதை மனதில் ஏற்றாமல் சர்வம் சிவமயம் என்று வாழ்வார்கள். சிவனுக்கு செய்யும் தொண்டில் இடையூறு ஏற்படுத்தினால் கடுங்கோபம் கொண்டு அவர்களைத் தண்டித்து பிறகு பூஜையில் ஈடுபடுவார்கள்.

சிவபூசைக்கு வைத்திருந்த பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் காலை வெட்டியவர் சண்டேசுவர நாயனார். சோழர்களுக்கு தலை நகர மாக விளங்கிய சிறப்பு மிக்க தலமான திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தார். சோழ அரச மரபினர் முடிசூட்டிக்கொள்ள விரும்பும் ஐந்து முக் கிய தலங்களுள் ஒன்றானது இத்தலம்.

அமரர்களுக்கு தொல்லை கொடுத்த சூரபதுமன் போன்ற அரக்கர்களை வென்று அமரர்களை மீட்டெடுத்த முருகப்பெருமான் அவர்கள் வழிபட காவிரியாற்றின் சிற்றாரான மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு அழகிய நகரத்தை உருவாக்கி கந்தவேள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடு செய்தார். சேய் சிவபூஜை செய்த காரணத்தால் இந்த ஊர் திருச்சேய்ஞலூர் என்னும் பெயரை பெற்றது.

இந்த ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரா தம்பதியரின் அன்புக்கு பரிசாக பிறந்தவர் விசாரசருமர். இவர் முற்பிறவிலேயே வேதாகாமங்களை கற்று அறிந்தவர் என்பதால் இப்பிறவியிலும் வேதாகாமங்களில் ஈடுகொண்டு அவற்றில் திறமையும் பெற்று விளங்கினார். இவரது சிந்தையில் எப்போதும் சிவனுடைய பொற்பாதம் மட்டுமே இருந்தது. அவரது குலப்படி அவருக்கு 7 வயதாகும் போது அவரது பெற்றோர்கள் உபநயனம் செய்து மகிழ்ந்தார்கள். வேதம் ஓதுவித்தார்கள். விசாரசருமர் அவரது குருவே வியக்கும்படி சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

ஒருமுறை விசாரசருமர் மண்ணியாற்றின் கரையில் போய்க்கொண்டிருந்த போது ஆநிரைகளை மேய்த்துக்கொண்டிருந்த  சிறுவன் ஒருவனை அவனுடைய பசு மாடு ஒன்று இலேசாக முட்ட அதில் கோபமுற்ற அச்சிறுவன்  கொம்பினால் அந்தப் பசுவை பலம் கொண்ட மட்டும் அடித்துக் கொண்டே இருந்தான். இதைக் கண்ட விசாரசருமருக்கு மனம் பொறுக்கவில்லை.

அச்சிறுவனிடம் சென்ற விசாரசருமர் அவனிடம் என்ன பாவம் செய்துவிட்டாய்? உலகில் இருக்கும் ஜீவராசிகளில் உயர்ந்தது ஆவினங்கள் தான். சிவபெருமானை நினைத்து நெற்றியில் தரிக்கும் விபூதியை நாம் ஆவினங்களிடம் இருந்து தான் பெறுகிறோம். எம்பெருமானின் அபிஷேகத்தில் பஞ்சகவ்யம் அளிப்பதும் ஆவினங்கள் தான். எம்பெருமானும் தேவியாரும் எழுந்தருளும் காமதேனு ஆவினங்கள்  குலமாயிற்றே. பால், தயிர், நெய் என்று மனிதர்களுக்கு அள்ளித்தருவதும் இவைதானே. இவ்வளவு ஏன் பசுக்களின் அங்கங்களில் முனிவர்களும், தேவர்களும் வசிப்பதாக கூறுகிறார்களே அவற்றைப் போற்றி பாதுக்காக்காமல் இப்படியொரு காரியத்தை செய்யலாமா? நான் வேண்டுமானால் பசுக்களை மேய்க்கும் பொறுப்பை பார்த்துக்கொள்கிறேனே என்று அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

வீட்டிலும்  மறையவர்களிடம் தானே பசுக்களை மேய்ப்பதாக சொல்லி அவர்களது  ஒப்புதலையும் பெற்றுவிட்டார். தினமும் பசுக்களை ஓட்டிக் கொண்டு பசுமையான மண்ணியாற்றின் கரையில் ஒதுங்கிவிடுவார். பசுக்களுக்கு புற்களும், நல்ல இடத்தில் நீர் அருந்தவும் செய்விப்பார். பசுக் களை தன்னுடைய குழந்தைப்போல் கண்ணுங் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

ஆவினங்களுக்கு விராசசருமரின் அன்பு புரிந்துவிட்டது போல். அவருடன் அன்பாக பழகின. பசுக்களை மேயவிட்டு மரநிழலில் தங்கியிருந்த விசா ரசருமருக்கு நிழல் இல்லாத காலங்களில் பசுக்கள் ஒன்று கூடி நிழலை தந்து பாதுகாத்தன. இவரது பராமரிப்பில் பசுக்கள் நல்ல வனப்போடு அதிக பால்தரும் சிறந்த ஆவினங்களாக மாறின. விசாரசருமரை அவ்வப்போது நாவால் நக்கி தங்கள் அன்பை மெய்ப்படுத்தின.

விசாரசருமரைக் கண்டதும் பசுக்களின் தாய்மடி பால் சுரப்பதைக் கண்டு இதை பரமனுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அதன்  பிறகு என்ன நடந்தது நாளை பார்க்கலாம். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP