சுமங்கலிகள் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாமா..?

சுமங்கலிகள் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாமா..?

சுமங்கலிகள் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாமா..?
X

பொதுவாக பெண்கள் பொட்டு வைப்பது என்பது நமது நாட்டு பண்பாடு மற்றும் கலாச்சாரங்களில் ஊறிய முக்கியமான ஒன்றாகும். குங்குமம் வைப்பது என்பது வெறும் ஒரு சடங்கு மற்றும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அதில் நிறைய அறிவியல் உணமைகளும் உள்ளன. குங்குமம் வைப்பது இரு புருவ மத்தியில் சற்றே மேலே ஏற்றி வைக்க வேண்டும்.

இதன் காரணமாக, எதிராளிகள், நம்மை வசியம் செய்ய முயற்சித்தால் தோற்றுப் போகும். ஒவ்வொரு குங்குமத்திற்கும் தனி சக்தி உண்டு. ஏனென்றால், குங்குமம் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும் கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது. மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது. அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர். அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில் பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.

எந்த கலரில் பொட்டு வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் கருப்பு நிறத்தில் வைக்கக் கூடாது என்கிறார்கள். இது உண்மையா என்றால், உண்மையில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், திருஷ்டி படக் கூடாது என்பதற்காக கருப்பு நிறை மையினை பொட்டாக குழந்தைகளுக்கு வைப்பது, பெண்களுக்கு வைப்பதும் வழக்கத்தில் உள்ள விஷயமே.

எனவே கருப்பு நிற பொட்டு வைப்பதில் தவறு ஏதுமில்லை. கணபதி ஹோமத்திற்குப் பிறகு, யாக சாலையில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலையும், நெய்யையும் கலந்து தயாரிக்கப்பட்ட கரிபிரசாதத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், கோயில்களில் உள்ள விளக்குகளில் காணப்படும் கருப்பு கரியை நெற்றியில் வைத்துக் கொள்ளக் கூடாது.

Next Story
Share it