ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?
X

சக்தி வழிபாட்டுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பதால், இந்த மாதம் வழிபாடுகளுக்கு மட்டுமே என்று முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் தான், ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.

ஆடி மாதம் பீடை மாதம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். மனமாகிய பீடத்தில், இறைவனை நினைத்து வழிபட வேண்டிய பீட மாதம் என்ற பெயரே, பீடை மாதம் என்று மருவிவிட்டது. அம்பாளை தினமும் நினைத்து வழிபடும் வகையில், மாதம் முழுவதுமே சிறப்புக்குரிய தினங்கள் தான்.

ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடி அமாவாசை, மகா சங்கடஹர சதுர்த்தி, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, வரலட்சுமி பூஜை என்று பண்டிகைக்காலமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு விசேஷ நாளைப் பற் றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

குறிப்பாக அம்பாளுக்கு உகந்த மாதமான இம்மாதத்தில் அம்பாளுக்குரிய சக்தி பீடங்கள் பற்றியும் காணலாம். இறைவழிபாட்டுக்குரிய இம்மாதத்தில், உரிய முறையில் அம்மனை வழிபட்டு அம்பாளின் பூரண அருளைப் பெற ஆடியை வரவேற்போம். ஆனந்த பேறு பெறுவோம்.

Next Story
Share it