நோய்களை போக்கிய புண்ணிய மூர்த்தி

நோய்களை போக்கிய புண்ணிய மூர்த்தி

நோய்களை போக்கிய புண்ணிய மூர்த்தி
X

பாபு ஸாஹேப் புட்டி என்பவர்  சாய்பாபாவின் தீவிர பக்தர். ஒருமுறை இவர் கடுமையான நோய்யினால் அவதிவுற்றார். வாந்தியெடுத்தல், வயிற்றுப் போக்கு இவரை வாட்டியெடுத்தது. அவருடைய அலமாரி, மருந்து மாத்திரைகளால் நிறைந்திருந்தது.

ஆயினும், அவற்றால் ஒரு பயனும் இல்லை. வாந்தியெடுத்தல் வயிற்றுப் போக்கு ஆன தன் காரணமாக பாபுஸாஹேப் மிகவும் தளர்ச்சி அடைந்தார். எனவே,  சாய்பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்லக்கூட அவரால் இயலவில்லை. சாய்பாபா அப்போது அவரைக் கூப்பிட்டனுப்பி, அவரைத் தன் முன் உட்காரச் செய்து, " இப்போது கவனி, இனிமேல் நீ வெளியேறக்கூடாது" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும் "வாந்தியெடுத்தலும் நிற்க வேண்டும்" எனக் கூறினார். இப்போது சாய்பாபாவின் சொற்களில் உள்ள சக்தியைக் கவனியுங்கள். இரண்டு வியாதிகளும் ஓடிவிட்டன. புட்டியும் குணமானார்.

மற்றொரு முறை காலரவால் அவர் தாக்கப்பட்டு கடினமான தாகத்தால் அல்லலுற்றார். டாக்டர் பிள்ளை எல்லாவித சிகிச்சை முறைகளையும் கையாண்டு குணமளிக்க இயலவில்லை. பின்னர், அவர் சாய்பாபாவிடம் சென்று தனது தாகத்தைத் தணித்துத் தன்னை குணமாக்கும் ஒரு பானத்தைப் பற்றி சாய்பாபாவிடம் கலந்து ஆலோசித்தார். சாய்பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில் வேகவைக்கப்பட்ட கலவைக் கூறாகிய பேரீச்சம்பழம், வால்நட் பருப்பு, பிஸ்தா இவற்றைச் சாப்பிடுவதைத் தேர்ந்து அருளினார். எந்த வைத்தியராலும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்று கருதப்படும். ஆனால், சாய்பாபாவின் கட்டளையை அறவே கீழ்ப்படியும் குணத்தால் இவை உட்கொள்ளப்பட்டன. அதிசயப்படும் வகையில் நோய் குணமாக்கவும் பட்டது. 

ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!

டாக்டர்.வி.ராமசுந்தரம்.
ஆன்மீக எழுத்தாளர்.

Next Story
Share it