நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தவரை ஆசிர்வதித்த பாபா

சாய்பாபாவின் பரம பக்தரான நானாஸாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை ஷீரடிக்கு ஒரு யோக பயிற்சியாளர் வரும்படி நேரிட்டது. பதஞ்சலி யோக சூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தங்களையும் அவர் கற்றிருந்தார். எனினும் யோகத்தில், நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை. தமது மனதை ஒருமுகப்படுத்தி வைக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிது நேரம் கூட எய்தவும் அவரால் முடியவில்லை.

நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தவரை ஆசிர்வதித்த பாபா
X

சாய்பாபா, தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்ட நேரம் சமாதி நிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார். உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அவர் ஷீரடி க்கு வந்தார். மசூதி அவர் சென்ற போது சாய்பாபா ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டு க் கொட்டிருப்பதைக் கண்டார். இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது." மட்கிப்போன ரொட்டியுடன், பச்சை வெங்காயத்தை உண்டு கொண்டிருக்கும் இம்மனிதர் எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு விடை கண்டு எனக்கு உதவ முடியும்?.
"சாய்பாபா அவரது உள்ளத்தைப் படித்தறிந்து, நானாஸாஹேப்பை நோக்கி " ஓ நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ண வேண்டும். மற்ற ஒருவரும், அங்ஙனம் செய்யக் கூடாது". இக்குறிப்பைக் கேட்ட யோகி ஆச்சரியத்தால், செயலிழந்தார். பின்னர், பூரண, சரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் அவர் வீழ்ந்தார். தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக் கேட்டு சாய்பாபா விடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார். இவ்வாறாகத் திருப்தி, மகிழ்ச்சியும், அடையப் பெற்று சாய்பாபாவின் "உதி" ஆசீர்வாதங்களிடன் அவர் சீரடியை விட்டுச் சென்றார்.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it