Logo

உஷார்!! மகாசிவராத்திரி நாளில் அன்னதானம் சாப்பிடலாமா?

ஒவ்வொரு வருடமும் மாசி மாத சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் மாசி மாதம் 9ம் தேதி நாளை, 21-02-2020 மகா சிவராத்திரி வர இருக்கிறது. பிரதோஷமும் நாளைய தினத்தில் வருவதால் மிகுந்த சிறப்பு உடைய சிவராத்திரியாக நாளைய தினம் கருதப்படுகிறது.
 | 

கோவிலில் அன்னதான பிரசாதம் சாப்பிடலாமா?

ஒவ்வொரு வருடமும் மாசி மாத சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் மாசி மாதம் 9ம் தேதி நாளை, 21-02-2020 மகா சிவராத்திரி வர இருக்கிறது. பிரதோஷமும் நாளைய தினத்தில் வருவதால் மிகுந்த சிறப்பு உடைய சிவராத்திரியாக நாளைய தினம் கருதப்படுகிறது.

கோவிலில் அன்னதான பிரசாதம் சாப்பிடலாமா?

மகா சிவராத்திரி தினத்தில் கோவில்களில் மாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய,விடிய அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதே சமயத்தில் கோவில்களுக்குள்ளேயும், வெளியேயும் அன்னதானத்தில் கேசரி, பொங்கல் தொடங்கி சாம்பார் சாதம், புளிசாதம், சுண்டல்  வரை அனைத்தும் விநியோகம் செய்வார்கள்.

கோவிலில் அன்னதான பிரசாதம் சாப்பிடலாமா?

இந்த உடலின் அன்றாட அவசியமான விஷயமாக இருப்பது உணவும், உறக்கமும் மட்டுமே. இரண்டையும் தவிர்த்து முழு இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதே சிவராத்திரியின் தாத்பர்யம். அதை மறந்து தருகிற அனைத்து பிரசாதங்களையும் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொள்வது ஏற்புடையதாகாது.

கோவிலில் அன்னதான பிரசாதம் சாப்பிடலாமா?

மகா சிவராத்திரி தினத்தில் காலை முதல் அன்றைய இரவு முடியும் நேரம் வரை  கண்விழித்திருந்து  சிவபெருமானின் திருநாமங்களையும், பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக் கொண்டும், இரவு  நான்கு ஜாம அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.மறுநாள் அதிகாலையில் குளித்து,கோவிலில் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தீபாராதனையை தரிசனம் செய்த பின்னரே  விரதத்தை முடிக்க வேண்டும் என்பது ஐதீகம். அப்போது தான் சிவராத்திரியின் முழுபலனைப் பெற முடியும்.

கோவிலில் அன்னதான பிரசாதம் சாப்பிடலாமா?

கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்லும் போது, வீண்பேச்சுக்களைக் குறைத்து அமைதியான முறையில் வந்து தரிசித்து அமைதியாகவே வெளியேற வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.  இனிமேலாவது இறையருளை நாடி வருபவர்களை ஆதரித்து அமைதியான முறையில் ஆண்டவனை தரிசித்து செல்ல உதவி செய்வோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP