அழுக்கு மிக்கவன் இறைவனுக்கு அழகானவனே...

உண்மையான பக்தி என்பது என்னவென்பதை தெரிந்துகொள்ளாதவரை யாருமே இறைவனி டம் அணுக முடியாது. இறைவனின் அருளை யும் பெறமுடியாது. இறைவனுக்கு நாம் செய் யும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், பூஜை களும், நறுமணமிக்க மலர்களும் இறைவனின் அருளைப் பெற்று தந்துவிடாது...

அழுக்கு மிக்கவன் இறைவனுக்கு அழகானவனே...
X

உண்மையான பக்தி என்பது என்னவென்பதை தெரிந்துகொள்ளாதவரை யாருமே இறைவனிடம் அணுக முடியாது. இறைவனின் அருளையும் பெறமுடியாது. இறைவனுக்கு நாம் செய்யும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், பூஜைகளும், நறுமணமிக்க மலர்களும் இறைவனின் அருளைப் பெற்று தந்துவிடாது. அப்படியான எண்ணம் கொண்டவர்கள் ஆன்மிக பாதையில் இன்னும் அடி எடுத்துவைக்கவில்லை என்பதே உண்மை.

புராதானமிக்க பெரிய கோயில் ஒன்று இருந்தது. உலகெங்கும் இருந்து மக்கள்வந்து செல்வார்கள்.செல்வமிக்க கோயிலாக கருதப்பட்ட அக்கோயி லின் வாயிலில் அழுக்கு ஆடைகளுடன் ஒருவன் அமர்ந்திருந்தான்.அவனுக்கு அந்தக் கோயிலுக்கு உள்ளே சென்று வழிபட ஆசையிருக்கும் ஆனாலும் அதற்கான தகுதி இல்லை என்று ஒதுங்கிவிடுவான்.

அந்தக் கோயிலைப் பராமரித்துவந்தவர்கள் அழுக்கு ஆடை கொண்டவர்களை உள்ளேஅனுமதிப்பதை மறுத்துவந்தார்கள். அப்படி வந்தால் கோயி லின் புனித தன்மை கெட்டுவிடும் என்பதை நம்பினார்கள். அழுக்கு ஆடை தரித்தவன் தினமும் அதிகாலையில் ஆலயத்தின் வாசலில் நின்று கட வுளை வணங்குவான்.

கடவுளை வணங்க முடியவில்லையென்றால் என்ன. அவருக்கு தொண்டு செய்பவர்களுக்கு சேவை செய்தாலும் போதுமே என்று நினைத்தான். உடனே கோயில் வாசலை தள்ளி சிறிய கொட்டகை போட்டு கோயிலுக்கு வருபவர்களின் காலணிகளை வாங்கி பாதுகாத்து வந்தான். இதற்காக யாரிடமும் எவ்விதக் கட்டணமும் வாங்காமல் இருந்தான்.

ஒரு நாள் அந்தக் கோயிலின் தலைமை பொறுப்பில் உள்ளவர் கோயில் வாசலில் வரும்போது அழுக்கு ஆடை கொண்டவன் ஓடிவந்து, அவரது அருகில் நின்று ஐயா, தங்கள் காலணிகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள். வழிபாடு முடிந்து தாங்கள் வரும்போது நான் கொடுக்கிறேன் என்று பவ்யமாக கேட்டான். அவரும் சரி என்று அவனை தள்ளியிருக்க சொல்லி அவனை தீண்டாமல் காலணிகளை கழற்றினார்.

அவன் மிகுந்த பக்தியோடு அதை கையில் எடுத்து சென்றான். அதைக் கண்டதும் முகத்தை சுருக்கியபடி உள்ளே சென்றார். பிறகு வெளியே வந்த அவரைக் கண்டு ஓடிச்சென்று காலணியைக் கொடுத்தான். அவர் கையிலிருந்த சில்லறையை அவனிடம் தந்தார். அவன் அதிர்ந்துபோய் மறுத் தான்.

ஐயா! இறைவனுக்கு செய்யும் பேறாக இதை நான் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம் என்றான். அவருக்கு மிகுந்த கோபம். இறைவனின் அருகில் இருந்து பூஜை செய்யும் நமக்கு இவன் என்ன இலவச சேவை செய்வது என்று… அவரது தன்மானம் தடுத்தது. உன்னிடம் நான் வெகுமதியாக பெறும் வேலை கூட எனக்கு அசிங்கமே அதனால் மரியாதையாக இந்த சில்லறையைப் பிடி என்றார்.

அவன் சிறிது நேரம் யோசித்தான். ஐயா வேண்டுமானால் எனக்காக ஒன்று செய்யுங்கள். எனக்கு கொடுக்க வேண்டிய சில்லறையை அந்த கடவுள் உண்டியலில் காணிக்கையாக செலுத்துங்கள். என்னால் தான் உள்ளே வரமுடியாதே என்றான். அவன் கண்களில் தெரிந்த ஏக்கம் அவருக்கு புன்ன கையைக் கொடுக்கவே ஏதோ உனக்காக இல்லையென்றாலும் கடவுளின் பெயரை சொன்னதால் அவருக்காக இதைச் செய்கிறேன் என்று சலித் தப்படி உள்ளே உண்டியல் பகுதிக்கு சென்றார்.

அது ஒரு விசேஷமான உண்டியல் மனமுவந்து யார் போட்டாலும் நிரம்பி வழியும் ஆனால் இன்று வரை அப்படி நிரம்பி வழிந்ததில்லை. கட வுளே உனக்கு அரிய பெரிய வெகுமதியை அந்த அழுக்குக்காரன் கொடுத்திருக்கிறான். மனமிருந்தால் ஏற்றுக்கொள் என்று அலட்சியமாக அந்த சில்லறையை உண்டியலில் விட்டெறிந்தார். அடுத்த நொடி உண்டியல் வழிந்து பிளவுபட்டது. ஆனாலும் மேலும் மேலும் சில்லறைகள் வழிந்த படியே இருந்தது.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கோபமும் மாறி மாறி வர் கருவறையை நோக்கி இத்தனை நாள் உனக்காக பூஜையும்,விரதமும், வழிபாடும் உரிய முறையில் சிறப்பாக செய்திருக்கிறேன். ஆனால் எனக்காக மனமிறங்காத நீ அழுக்கு பிடித்த ஒருவன் உன்னை உள்ளே வந்து வணங்க கூட தகுதி யற்றவன் கொடுக்கும் சில்லறையில் மயங்குவதா? இது துஷ்டசக்திகளின் வேலையா என்றார் அந்த பெரிய மனிதர்.

விண்ணை எட்டும் பேரொளியில் தோன்றிய கடவுள் உண்மைதான் உங்கள் அலங்காரங்கள், வழிபாடுகள், பூஜைகள், சடங்குகள் எல்லாமே புற அலங்காரமாக மன அழுக்கோடு இருந்தது. மனதைக் கடந்து உள்ளே செல்லும் இறைவனுக்கு தேவை மன அழகே. அதை அந்த அழுக்குப்படிந்த வனிடமே உணர்ந்தேன். அவன் மனது அழகானது. அற்புதமானது. அதில் குடியிருக்கவே நான் விரும்புகிறேன் என்றார்.

சுற்றியிருப்பவர்கள் இறைவனது அன்பை எப்படி பெற வேண்டும் என்று புரிந்துகொண்டார்கள். இப்போது அழுக்கு மிக்கவன் எல்லோர் கண்களுக் கும் அழகானவனாக தெரிந்தான்.


newstm.in

newstm.in

Next Story
Share it