பாபாவின் கைகள் பட்டு புனிதமாக்கப்பட்ட நாணயம்

கேப்டன் ஹாடே என்றொரு பக்தர் இருந்தார். அவர் சாய்பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கக் வேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார். சீரடிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரை சந்தித்தார். அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார்.

பாபாவின் கைகள் பட்டு புனிதமாக்கப்பட்ட நாணயம்
X

கேப்டன் ஹாடே என்றொரு பக்தர் இருந்தார். அவர் சாய்பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கக் வேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார். சீரடிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரை சந்தித்தார்.
அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார். அந்த நண்பர் ஷீரடிக்குச் சென்று நமஸ்கரித்த பின் முதலில் தமது ரூபாயை தக்ஷிணையாக அவர் சாய்பாபாவுக்கு அளித்தார். அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொண்டார். பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தை கொடுத்தார். அதை சாய்பாபா கையில் வாங்கி உற்றுப்பார்த்து விட்டு அதனை தம் முன் பிடித்து தமது வலது கைக் கட்டைவிரலால் சுண்டிவிட்டு விளையாடினார்.

பாபாவின் கைகள் பட்டு புனிதமாக்கப்பட்ட நாணயம்

பின் அந்த நண்பரிடம் அவர் "உதிப் பிரசாத்துடன் இதை, அதன் உரிமையாளர்களரிடம் திரும்பக்கொடு. அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு. அமைதியுடனும் திருப்தியுடனும் அவரை வாழச் சொல்" என்று கூறினார். அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம் திரும்ப அளித்து, ஷீரடியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார். இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, சாய்பாபா எப்போதும் நாம் விரும்பியமாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார் என்று உணர்ந்தார். சாய்பாவும் அதையே முறையாக நிறைவேற்றினார்.


டாக்டர் வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

newstm.in

Tags:
Next Story
Share it